மீண்­டும் ‘வசந்த மாளிகை!’

09 ஏப்ரல் 2019, 06:53 PM

சிவாஜி கணே­சன், வாணிஸ்ரீ, கே. பாலாஜி, நாகேஷ், வி.கே. ராம­சாமி, மேஜர் சுந்­தர்­ரா­ஜன் நடிப்­பில், 45 வரு­டங்­க­ளுக்கு முன்பு திரைக்கு வந்த படம், ‘வசந்த மாளிகை.’ கே.எஸ். பிர­காஷ்­ராவ் இயக்­கிய இந்த படத்தை விஜயா சுரேஷ் கம்­பைன்ஸ் தயா­ரிக்க, கே.வி. மகா­தே­வன் இசை­ய­மைத்­தி­ருந்­தார்.

வெள்­ளி­ விழா கொண்­டா­டிய இப்­ப­டம், தற்­போது இயக்­கு­னர் வி.சி. குக­நா­தன் மேற்­பார்­வை­யில், நவீன டிஜிட்­டல் தொழில்­நுட்­பத்­துக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது. நாக­ராஜ் வெளி­யி­டு­கி­றார். இதன் டிரெய்­லர் வெளி­யீட்டு விழா சமீ­பத்­தில் சென்­னை­யில் நடந்­தது. சிவாஜி குடும்­பத்­தி­ன­ரு­டன், இப்­ப­டத்­தில் பணி­யாற்­றி­ய­வர்­கள் பங்­கேற்­ற­னர்.