45 வயது தனுஷ்!

09 ஏப்ரல் 2019, 06:50 PM

‘கொடி’ படத்தில் அண்ணன், தம்பி என்று இரு வேடங்களில் நடித்தார் தனுஷ். இப்போது வெற்றிமாறன் இயக்கும் ‘அசுரன்’ படத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார்.  இதில் அவர் தந்தை, மகனாக நடிக்கிறார். 45 வயது நிரம்பிய தந்தை தனுஷ் ஜோடியாக, மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகிறார்.

பூமணி எழுதியிருக்கும் ‘வெக்கை’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் பசுபதி, இயக்குனர் பாலாஜி  சக்திவேல், கருணாஸ் மகன் கென், பவன் நடிக்கின்றனர்.