அதிர்ச்சி!

09 ஏப்ரல் 2019, 06:50 PM

நடிகை எமி ஜாக்சன் சமீபத்தில் தனது பாய்பிரண்ட் ஜார்ஜ் பனயோட்டோ புகைப்படத்தை வெளியிட்டு இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் இந்த ஆண்டில் திருமணம் நடக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இருவரும் பகிரங்கமாக டேட்டிங்கில் ஈடுபட்டனர். தற்போது தனது இணைய தள பக்கத்தில் மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் தான் கர்ப்பமாக இருப்பதாக சூசகமாக தெரிவித்திருக்கிறார். எமியின் இந்த மெசேஜ்தான் ரசிகர்களை அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. திருமணம் ஆகாமலே அவர் கர்ப்பமாகியிருப்பதாக கூறப்படுகிறது.