பாடல்கள் வெளியீடு!

15 மார்ச் 2019, 03:51 PM

ஸ்ரீபெருமாள்சாமி பிலிம்ஸ் சார்பாக சி. பெருமாள் தயாரிக்கும் ‘ஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையிலுள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் இயக்குநர்கள் பேரரசு, ராசி. அழகப்பன், சுப்பிரமணியம் சிவா, ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே. ராஜன், படத்தின் இயக்குநர் கே.எஸ். மணிகண்டன், தயாரிப்பாளர் சி. பெருமாள், கவிஞர் சொற்கோ, படத்தின் நாயகர்கள் விகாஷ், முத்து ராமன், நாயகி டெல்லிஷா, நடன இயக்கு நர் கொம்பு முருகன், இசையமைப்பாளர் விஜய் பாபு, சண்டை இயக்குநர் ராக்கி ராஜேஷ், ஒளிப்பதிவாளர் ஆர்.கே. பழனி, பி.எஸ். என்டர்டெய்ன்மென்ட் உதய குமார், எஸ்.பி.கே. எண்டர்பிரைசஸ் எஸ்.பி. குமார், ஆகியோர் கலந்து கொண்டனர். ‘ஒற்றாடல் ‘படத்தின் பாடல்களை இயக்குநர் பேரரசு வெளி யிட்டார். சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.