விஜய் படத்தில் ரவி தேஜா!

15 மார்ச் 2019, 03:50 PM

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க 2016ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தெறி.’  1990ம் ஆண்டு விஜயகாந்த், பானுப்ரியா, ரேவதி நடித்து வெளிவந்த ‘சத்ரியன்’ படத்தை அட்லீ அப்படியே காப்பியடித்து ‘தெறி’ படமாக எடுத்து விட்டார் என்ற விமர்சனங்களும் அதிகமாக வந்தன. அப்படி தமிழ் படத்தையே மீண்டும் ரீமேக்காக்கி வெளிவந்த ‘தெறி’ ரீமேக்கை தெலுங்கில் ரீமேக் செய்ய எப்போதோ முடிவு செய்தார்கள்.

விஜய் நடித்த கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்க ஆரம்பிக்க முடிவு செய்து பின்னர் அதை கைவிட்டார்கள். ஆனால், ரவி தேஜாவுக்கு தொடர்ச்சியாக தெலுங்கில் தோல்வி படங்களாகவே அமைந்து வருவதால், அதை மாற்ற இப்போது மீண்டும் ‘தெறி’ ரீமேக்கை தூசி தட்டி எடுக்கத் தயாராகி வருகிறார்களாம். முதலில் இதன் ரீமேக்கில் நடிக்க சம்மதித்து பின்னர் மறுத்த ரவி தேஜா, இப்போது மீண்டும் நடிக்க சம்மதம் சொல்லியிருப்பது டோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.