வாய்ப்பு பறிபோனது!

15 மார்ச் 2019, 03:49 PM

விஷால் நடிக்கும் படம் ‘அயோக்யா.’ அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அறிமுக டைரக்டர் வெங்கட்மோகன் இயக்குகிறார். இதில் விஷால் ஜோடியாக ராசி கன்னா நடிக்கிறார். இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ஸ்ரத்தா தாஸ் ஒப்பந்தமானார். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ள ஸ்ரத்தா, இந்த படம் மூலம் தமிழில் அறிமுகமாக இருந்தார். இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் சனா கான் ஒப்பந்தமாகி, ஸ்ரத்தாவை படத்திலிருந்து நீக்கியுள்ளனர். ‘சிலம்பாட்டம்,’ ‘தம்பிக்கு இந்த ஊரு,’ ‘ஆயிரம் விளக்கு’ படங்களில் இவர் நடித்துள்ளார். இந்தியிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிக்க தூது விட்டு ஸ்ரத்தாவின் வாய்ப்பை சனா கான் பறித்துள்ளதாக கோலிவுட்டில் பேச்சு.