நெகட்­டிவ் வேடம் பிடிக்­கும்!

12 மார்ச் 2019, 04:41 PM

நடிகை இந்து (எ) தேவந்தி! லண்­ட­னி­லி­ருந்து சென்னை வந்து செட்­டி­லான இவ­ருக்கு ‘வீர­கே­ச­ரன்’ படத்­தில் நடிக்­கும் வாய்ப்பு கிடைக்க, அதைத் தொடர்ந்து ‘என்­றென்­றும் புன்­னகை,’  ‘வெண்­ணிலா வீடு,’ ‘அம்­மா­வின் கைப்­பேசி,’ ‘நினைத்­தது யாரோ,’ ‘காத­லுக்கு கண்­ணில்லை,’ ‘கதை திரைக்­கதை வச­னம் இயக்­கம்’ என்று ஏகப்­பட்ட படங்­க­ளில் அம்மா மற்­றும் பல­த­ரப்­பட்ட கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடித்து பாராட்டை பெற்­றார். ‘‘நெக­டிவ்­வான வேடங்­க­ளில் நடிப்­பது எனக்கு ரொம்ப பிடிக்­கும். அது­தான் மக்­க­ளி­டம் நம்மை வெகு சீக்­கி­ரம் கொண்டு சேர்க்­கும்’’ என்­கி­றார் இந்து என்­கிற தேவந்தி. சமீ­பத்­தில் இவ­ருக்கு ‘திரு­மதி இந்­தியா 2019’ சர்­வ­தேச விரு­தை­யும் பெற்று மகிழ்ச்­சி­யில் இருக்­கி­றார். ‘‘பெரிய திரை­யாக இருந்­தா­லும், சின்­னத்­தி­ரை­யாக இருந்­தா­லும், விளம்­ப­ரப் பட­மாக இருந்­தா­லும் அதில் நான் தனிக்­கொடி நாட்ட வேண்­டும் என்­ப­து­தான் என் ஆசை’’ என்­கி­றார். குடும்­பம் எல்­லாம் லண்­ட­னில் இருந்­தா­லும் சென்­னை­யில் கலை தாகத்­தோடு தங்கி இருக்­கி­றார் இவர். எந்த வேட­மா­னா­லும் நான் என் தனித்­தி­ற­மையை காட்­டு­வேன் என்று உறு­தி­பட கூறு­கி­றார்.