எனக்கு காமெடி வரும்!

12 மார்ச் 2019, 04:40 PM

சின்­னத்­தி­ரையை தொடர்ந்து நடி­கர் சேத்­தன் தன் ராஜாங்­கத்­தைப் பெரிய திரை­யி­லும் விரி­வாக்க விரும்­பி­னார். ‘தாம் தூம்’ படத்­தில் அறி­மு­க­மாகி இப்­போது வரை­யி­லும் தமிழ், தெலுங்கு, கன்­ன­டம் என்று 50 படங்­களை முடித்து விட்­டார். இருந்­தா­லும் தமிழ் சினி­மா­வில் குறிப்­பி­டத்­தக்க ஒரு இடத்தை இன்­ன­மும் பிடிக்­க­வில்­லையே என்­கிற ஏக்­கம் அவ­ருக்­குள் இப்­போ­தும் உள்­ளது.

இது தொடர்­பாக சொன்ன சேத்­தன், “நான் டிவி சீரி­யல்­க­ளில் ஓய்­வில்­லா­மல் நடித்­துக் கொண்­டி­ருந்­த­போது என்னை வலை­வீ­சித் தேடி வாய்ப்பு கொடுத்­த­வர் ஜீவா. அந்த படம் ‘தாம் தூம்.’ அடிப்­ப­டை­யில் எனக்கு காமெடி வரும், இதை யாருமே கண்­டு­கொள்­ள­வில்லை. நானும் அதை பெரி­தாக எடுத்து கொள்­ள­வில்லை. அத­னால் பல படங்­க­ளில் பல கேரக்­டர்­க­ளில் நடித்­தேன். கடை­சி­யாக வந்த படம் ‘தமிழ்ப் படம்- 2.’ அதே இயக்­கு­நர் சி.எஸ். அமு­த­னின் ‘ரெண்­டா­வது படம்’ என்ற படத்­தி­லும் நடித்­தேன்.

எனக்கு காமெ­டி­யும் வரும் என்று கண்டு கொண்­ட­வர் இயக்­கு­நர் அமு­தன். எனக்கு பாசிட்­டிவ், நெகட்­டிவ், காமெடி என எல்லா கேரக்­ட­ரும் செய்ய ஆசை. எந்த ஒரு வட்­டத்­தி­லும் சிக்­கிக் கொள்ள விருப்­பம் இல்லை. இந்த விஷ­யத்­தில் எனக்கு நாசர் சார்­தான் முன்­னோடி. அவர் எல்­லா­மும் ஏற்று நடிப்­பார். எந்த வட்­டத்­தி­லும் சிக்­கா­த­தால்­தான் அவ­ரால் காலம் கடந்து நிற்க முடி­கி­றது. நானும் அவர் வழி­யில் செல்ல விரும்பு­ கிறேன்’’ என்­கி­றார் சேத்­தன். இவர் தற்­போது சுசீந்­தி­ரன் இயக்­கத்­தில் ‘கென்­னடி கிளப்’  படத்­தில் பார­தி­ராஜா, சசி­கு­மா­ரு­டன் இணைந்து நடிக்­கி­றார். சி.வி. குமார் தயா­ரிப்­பில் இரண்டு படங்­கள் உட்­பட 5 புதிய படங்­க­ளி­லும் நடித்து வரு­கி­றா­ராம்.