தனுஷ் – சினேகா படம்!

12 மார்ச் 2019, 04:39 PM

‘விஸ்­வா­சம்’ படத்தை  தொடர்ந்து சத்­ய­ஜோதி பிலிம்ஸ், அடுத்து தனுஷ் நாய­க­னாக நடிக்­கும் ‘தயா­ரிப்பு எண் 34’ என்ற தற்­கா­லிக தலைப்­பில் புதிய படத்தை உரு­வாக்­கிக் கொண்­டி­ருக்­கி­றது. தனுஷ் மற்­றும் சினேகா நடிக்­கும் முதல் கட்ட படப்­பி­டிப்பு குற்­றா­லத்­தில் துவங்­கி­யுள்­ளது. தொடர்ந்து 30 நாட்­கள் அங்கு படப்­பி­டிப்பு நடை­பெற இருக்­கி­றது.

‘கொடி’ படத்­துக்கு பிறகு தனுஷ் மற்­றும் இயக்­கு­னர் துரை செந்­தில்­கு­மார் இரண்­டா­வது முறை­யாக இணைந்­தி­ருக்­கி­றார்­கள். இது­கு­றித்து துரை செந்­தில்­கு­மார் கூறும்­போது, ‘‘‘கொடி’ படத்­தின் வெற்­றிக்கு பிறகு மீண்­டும் தனுஷ் உடன் இணைந்து பணி­யாற்­று­வ­தில் மகிழ்ச்சி அடை­கி­றேன். மிகச்­சி­றந்த படத்தை வழங்­கும் பொறுப்பு என் தோள்­க­ளில் உள்­ளது என்­பதை நான் உணர்­கி­றேன், அதை நிறை­வேற்ற கடு­மை­யாக உழைப்­பேன்” என்­றார்.