லோ பட்­ஜெட் ஹைவோல்­டேஜ் படம்!

12 மார்ச் 2019, 04:38 PM

தன்­னு­டன் படித்த 50 நண்­பர்­க­ளின் பண­மு­த­லீட்­டில் தயா­ரான படம் ‘நெடு­நல்­வாடை.’ சுமார் 2 ஆண்­டு­க­ளுக்கு முன்பு துவங்­கப்­பட்டு பல்­வேறு பிரச்­னை­களை எதிர்­கொண்ட இப்­ப­டம் வரு­கிற 15ம் தேதி ரிலீ­ஸா­கி­றது.

இப்­ப­டத்­தில் ‘பூ’ ராமு, இளங்கோ, அஞ்­சலி நாயர், அஜய் நட­ராஜ், மைம் கோபி, ஐந்து கோவி­லான், செந்தி உட்­பட பலர் நடித்­துள்­ளார்­கள். இப்­ப­டத்தை செல்­வக்­கண்­ணன் இயக்­கி­யுள்­ளார். இதன் டிரெய்­லர் வெளி­யீட்டு விழா சமீ­பத்­தில் சென்னை பிர­சாத் லேப் தியேட்­ட­ரில் நடை­பெற்­றது. அப்­போது பேசிய இயக்­கு­னர் செல்­வக்­கண்­ணன் கூறி­ய­தா­வது:

‘‘இந்த படம் எத்­த­னையோ முறை டிராப் ஆக­வேண்­டி­யது. ஆனால் நடந்த உண்­மை­கள் எதை­யும் மறைக்­கா­மல் பிரச்­னை­கள் அத்­த­னை­யை­யும் நண்­பர்­கள் வாட்ஸ் அப்­பில் அனுப்­பிக்­கொண்டே இருந்­தேன். அவர்­க­ளுக்கு பிராக்­டிக்­க­லாக சினிமா குறித்து எது­வுமே தெரி­யா­தென்­றா­லும், நான் பொய் சொல்­ல­வில்லை என்ற ஒரே கார­ணத்­துக்­காக தொடர்ந்து உதவி படத்தை முடிக்க உத­வி­னார்­கள். நல்ல படங்­களை ரசி­கர்­கள் ஒரு­நா­ளும் கைவிட்­ட­தில்லை என்ற நம்­பிக்­கை­யில் மிக­வும் தர­மான ஒரு படத்தை நல்ல டெக்­னீ­ஷி­யன்­க­ளு­டன் இணைந்து உரு­வாக்­கி­யி­ருக்­கி­றேன். ‘நெடு­நல்­வாடை’ லோ பட்­ஜெட் டெக்­னீ­ஷி­யன்­க­ளின் ஹைவோல்­டேஜ் படம்’’ என்­றார்.