அனிகா பேசும் அஜீத் புராணம்!

12 மார்ச் 2019, 04:28 PM

‘‘அஜீத் சாரின் ‘என்னை அறிந்­தால்’ படத்­துக்­குப் பிறகு இப்போ ‘விஸ்­வா­சம்’ல நடிச்­சி­ருக்­கேன். கேர­ளா­வில் மலப்­பு­ரம் அருகே உள்ள மஞ்­சே­ரி­யில்­தான் பிறந்­தேன். ஆறா­வது கிரேட் படிக்­கும் போதே, டப்ஸ்­மாஷ் நிறைய பண்­ணு­வேன். குழந்தை நட்­சத்­தி­ர­மா­கவே மலை­யா­ளத்­தில் நிறைய படங்­கள் நடிச்­சி­ருக்­கேன். அங்கே நான் நடிச்ச ‘5 சுந்­த­ரி­கள்’ படத்­துக்கு கேரள அர­சின் ‘சிறந்த குழந்தை நட்­சத்­தி­ரம்’ விருது கிடைச்­சி­ருக்கு.

நயன்­தாரா மேடத்­தோடு கூட ஏற்­க­னவே மலை­யா­ளத்­தில் ‘பாஸ்­கர் தி ராஸ்­கல்’ல நடிச்­சி­ருக்­கேன். மறு­ப­டி­யும் அவங்­க­ளோட ‘விஸ்­வா­சம்’ல நடிச்­சது ஸ்வீட் எக்ஸ்­பீ­ரி­யன்ஸ். ஸ்பாட்ல அஜீத் சார் எப்­ப­வும் கல­க­லப்பா இருப்­பார்.  

சினிமா தவிர கிளா­சிக்­கல் டான்ஸ், டிரா­யிங் இதெல்­லாம் பிடிக்­கும்.  என்னை ‘பேபி அனி­கா’னு கூப்­பி­டாம அனி­கானு சொன்­னாலே போதும்!’’ என புன்­ன­கைக்­கும் அனிகா, அடுத்து விஜய் சேது­ப­தி­யின் ‘மாம­னி­தன்’ படத்­தி­லும் நடிக்­கி­றார்.