வித்தியாசம்!

08 மார்ச் 2019, 03:00 PM

அஜீத் நடித்து வரும் ‘பிங்க்’ ரீமேக் படத்­திற்கு நேற்­று­தான் 'நேர்­கொண்ட பார்வை' என்ற டைட்­டிலை அறி­வித்­துள்­ள­னர். இதில் டாப்சி நடித்த ரோலில் ஷ்ரதா ஸ்ரீநாத் நடிக்­கி­றார். இதற்­கு­முன் ‘விக்­ரம் வேதா’ படத்­தில் மாத­வ­னின் மனை­வி­யாக நடித்­த­வர் அவர். சமீ­பத்­தில் அவ­ரி­டம் பாலி­வுட் சினி­மா­விற்­கும் தென்­னிந்­திய சினி­மா­விற்­கும் என்ன வித்­தி­யா­சம் உங்­க­ளுக்கு தெரி­கி­றது என கேட்­டுள்­ள­னர்.

அதற்கு பதில் அளித்த ஷ்ரதா "பாலி­வுட்­டில் படம் எடுக்­கும்­போது அனைத்து வேலைகளுக்­கும் ஒவ்­வொ­ரு­வர் இருப்­பார்­கள். எல்­லாம் சரி­யாக நடக்­கும்.

ஆனால், தென்­னிந்­திய சினி­மா­வில் அப்­படி இல்லை. சில சம­யங்­க­ளில் இயக்­கு­னரோ அல்­லது அவ­ரது மனை­வியோ காஸ்ட்­யூம் வாங்க செல்­வதை நான் பார்த்­தி­ருக்­கி­றேன். மற்­ற­படி வேலை செய்­யும் விதம் ஒரே மாதி­ரி­தான் இரண்டு இடங்­க­ளி­லும்" என தெரி­வித்­துள்­ளார்.