திருத்தம்!

08 மார்ச் 2019, 02:57 PM

சுமார் 10 வரு­டங்­க­ளுக்கு முன் வின்­சென்ட் செல்வா இயக்­கத்­தில் சரத்­கு­மார் நடிப்­பில் ‘காக்கி’ என்ற படம் தயா­ரிக்­கப்­பட்­டது. ஏறக்­கு­றைய பர்ஸ்ட் காப்பி ரெடி­யான நிலை­யில் ‘காக்கி’ படத்தை கிடப்­பில் போட்டு விட்­ட­னர். இதெல்­லாம் தெரி­யுமோ என்­னவோ.. தற்­போது விஜய் ஆண்­டனி நடிக்­கும் படத்­துக்கு ‘காக்கி’ என்று பெயர் வைத்­துள்­ள­னர். படம் வெளி­யா­கும்­போது பழைய ‘காக்கி’ படத்­தின் தயா­ரிப்­பா­ளர் கோர்ட்­டுக்­குப் போனால் விஜய் ஆண்­ட­னி­யின் ‘காக்கி’ படத்­துக்கு சிக்­கல் வர வாய்ப்­புள்­ளது.  அத­னாலோ என்­னவோ ‘காக்கி’ படத்­தின் பூஜை விளம்­ப­ரத்­தில் ‘காக்கி’ என்ற எழுத்­துக்கு பக்­கத்­தில் சிறி­ய­தாக ‘டா’ என்று போட்­டுள்­ள­னர். அதா­வது ‘காக்­கிடா’ என்­ப­து­தான் படத்­தின் பெய­ராம்.