சும்மா செட்டப்பு!

08 மார்ச் 2019, 02:56 PM

இயக்­கு­நர் கேசி சுந்­த­ரம் இயக்­கத்­தில் உரு­வாகி உள்ள படம் ‘ஜூலை காற்­றில்.’ இந்த படத்­தின் பாடல் வெளி­யீடு மற்­றும் டிரெய்­லர் வெளி­யீட்டு விழா சென்­னை­யில் சமீ­பத்­தில் நடந்­தது. இந்­நி­கழ்­வில் நடி­கர் கார்த்தி, இயக்­கு­நர் கே.எஸ். ரவி­கு­மார் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.

 இந்­நி­கழ்ச்சியை தொகுத்து வழங்­கிய நடிகை கஸ்­துாரி, கார்த்­தியை கிண்­டல் செய்­யும் வித­மாக செல்பி எடுக்க அழைத்­தார். அதற்கு சாமர்த்­தி­ய­மாக பதி­ல­ளித்­து­விட்டு படத்­தைப் பற்றி பேசி­னார் நடி­கர் கார்த்தி.

இந்த வீடியோ சமூக வலை­த­ளத்­தில் வைர­லாக பர­வி­யது.

 பொது இடத்­தில் ரசி­கர் ஒரு­வர் மூத்த நடி­கர் சிவ

கு­மா­ரு­டன் செல்பி எடுக்க முயன்ற போது ரசி­க­ரின் செல்­போனை தட்டி விட்ட வீடியோ சமூக வலை­த­ளத்­தில் வைர­லா­னது. இந்த சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யாக வைத்து நடி­கர் கார்த்­தியை கிண்­டல் செய்த கஸ்­துாரி தனது டுவிட்­டர் பக்­கத்­தில் அந்த நிகழ்­வில் ஏன் அப்­படி நடந்­து கொண்­டேன் என்று விளக்­கம் கொடுத்­துள்­ளார். அதில், “‘ஜூலை காற்­றில்' படத்­தின் இசை வெளி­யீட்டு விழா­வில் ஏதா­வது வைரல் விஷ­யம் வேண்­டும் என்று செய்­தது. ஒர்க் அவுட் ஆயிடுச்சு, இதை நம்பி கொந்­த­ளிக்­கிற எமோஷனல் கய்ஸ் கண்­டிப்பா ‘ஜூலை காற்­றில்’ படத்தை என்­ஜாய் பண்­ணு­வீங்க” என்று பதி­விட்­டுள்­ளார். ‘சமா­ளிக்­கா­தீங்க’ என்று பல­ரும் பதில் கருத்து தெரி­வித்து வரு­கின்­ற­னர்.