40 அச்சப்பட வேண்டாம்!

12 பிப்ரவரி 2019, 04:16 PM

வித்யாபாலன் தற்போது நாற்பது வயதை தாண்டியுள்ளார். இந்த வயதிலும் கதாநாயகியாக நடிப்பதை, பலரும் வியப்பாக பேசுகிறார்கள். இது குறித்து வித்யாபாலன் கூறியதாவது :–

‘‘பெண்களை, ஒரு விளையாட்டுப் பொருளாகவும், அடிமையாக இருக்க வேண்டிய ஒரு உயிரினமாகவும் சமூகம் பார்க்கிறது. அதேபோல, சிறுவயதிலிருந்தே, அவர்கள் எல்லாவற்றிலும் வெட்கப்பட்டே நடக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதனால் பாலியல் சம்பந்தமான விஷயங்களில் கூட, கூச்சமில்லாமல், அவர்களால், முழுமையாக ஈடுபட முடியவில்லை. பெண்கள் நாற்பது வயதை கடந்த பின்தான் குறும்புத்தனமாகவும், சூடாகவும் மாறுகின்றனர்.

இருபது வயதில் கனவை நோக்கி, என் வாழ்க்கை நகர்ந்தது. முப்பது வயதில், என்னை பற்றி நானே அறிந்து கொள்வதில் காலங்கள் நகர்ந்தன. நாற்பது வயதுக்கு பின்தான் வாழ்க்கையை அனுபவிக்கிறேன். அதனால், நாற்பது வயதை கடந்து விட்டோம் என எந்த பெண்ணும் அச்சம் கொள்ள வேண்டாம். நாற்பது ஒன்றும் பெரிய வயதல்ல. ஐம்பதிலும் கூட எதையும் சாதிக்கலாம்.’’