ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 13–2–19

12 பிப்ரவரி 2019, 03:55 PM

‘பன்­னீர் புஷ்­பங்­களே...!’

(சென்ற வாரத் தொடர்ச்சி)

ரிக்­கார்­டிங் சம­யத்­தில் ஸ்டூடி­யோ­விற்கு வந்த கம­லி­டம் இந்த பாட­லைப் பாடிக்­காட்டி கம­லைப் பாடச்­சொல்­லி­யி­ருக்­கி­றார் இளை­ய­ராஜா. பாடல் நன்­றாக வர அப்­ப­டியே பாட­வைத்து ரிக்­கார்டு செய்­தார் இளை­ய­ராஜா. ஆனால், படம் வெளி­யான பிற­கு­தான் தான் ஒரு விஷ­யத்­தைக் கவ­னிக்­கா­மல் விட்­டு­விட்­ட­தாக என்று கம­லி­டம் சொல்­லி­யி­ருக்­கி­றார் இளை­ய­ராஜா. ‘பன்­னீர் புஷ்­பங்­களே’ என்ற வரியை கமல் ‘பன்­னீர் புஷ்­பங்­ஙளே’ என்று பாடி­யி­ருப்­பார்.

இந்த பாடல் உத­ய­மா­னது ஏதோ ஒரு ஓட்­ட­லிலோ அல்­லது ரிக்­கார்­டிங் ஸ்டூடி­யோ­விலோ அல்ல. கோவை­யில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்து கொண்­டி­ருந்த போது உத­ய­மான பாடல் இது. விழா மேடை­யில் நிகழ்ச்சி நடந்து கொண்­டி­ருந்த போது பஞ்சு அரு­ணா­ச­ல­மும், எஸ்.பி. முத்­து­ரா­ம­னும் மேடைக்கு வந்து ஒரு பாட­லுக்­கான சிச்­சு­வே­ஷன் சொல்ல மேடை­யி­லேயே கம்­போஸ் செய்து ஆர்க்­கெஸ்ட்­ரா­வோடு பாடி­னார் இளை­ய­ராஜா. அந்த பாட­லுக்கு வேறு வார்த்­தை­க­ளைப் போட்டு கங்கை அம­ரன் எழு­திய பாடல்­தான் இந்த ‘பன்­னீர் புஷ்­பங்(ங)ளே’ பாடல்.

இளை­ய­ரா­ஜா­வின் இசைக்கு இதில் பெரும்­பங்கு உண்டு. வித்­தி­யா­ச­மான பட­மென்­றாலே ராஜா­விற்கு பயங்­கர மூடு வந்­து­வி­டுமோ என்­னமோ. மனி­தர் பின்­னி­யி­ருந்­தார்.

கமல்­தான் இளை­ய­ரா­ஜாவை இப்­ப­டத்­துக்கு புக் செய்­தார். இது மட்­டு­மல்ல படத்­துக்­காக பல விஷ­யங்­களை கமல்­தான் செய்­தார்.

இப்­ப­டத்­துக்கு கம­லு­டன் ரஜி­னி­யை­யும் சேர்த்­தால் நன்­றாக இருக்­கும் என்று அனந்து சொன்­னார். அனந்து, கமல் ரஜி­னி­யு­டன் ‘நினைத்­தாலே இனிக்­கும்’ படப்­பி­டிப்­புக்­காக சிங்­கப்­பூர் சென்­றார். அங்­கேயே பேசி ரஜி­னி­யும் சம்­ம­தித்­தார். யாருக்­கும் நாங்­கள் அட்­வான்ஸ் கொடுக்­க­வில்லை. பூஜை போட்­டோம்.

அப்­போ­தெல்­லாம் இசை­ய­மைப்­பா­ளர்­கள் பட ஆபீ­சுக்கே வரு­வார்­கள். ஆழ்­வார்­பேட்­டை­யில் அலு­வ­ல­கம் போட்­டி­ருந்­தோம். எங்­கள் அலு­வ­ல­கத்­தில் பேன் கிடை­யாது. மறு­நாள் இளை­ய­ராஜா வரப்­போ­கி­றார் என்­ப­தால் முதல் நாள் மாலையே பேன் வாங்கி மாட்­டி­னோம். ஆனால் இளை­ய­ராஜா வந்­த­போது மின்­சா­ரம் இல்­லா­மல் போய்­விட்­டது.

மூன்று பாடல்­கள் கம்­போ­சிங். கண்­ண­தா­சனை வைத்து பாடல்­கள் எழு­த­லாம் என்று தீர்­மா­னித்­தோம். எங்­கள் அலு­வ­ல­கத்­துக்­குப் பக்­கமே கண்­ண­தா­சன் நடத்­திய கவிதா ஹோட்­டல். அங்­கு­தான் கவி­ஞர் இருப்­பார். இசை­ய­மைப்­பா­ளர்­கள் அங்கே செல்­வார்­கள். அங்கே இளை­ய­ராஜா வேறொரு பாடல் கம்­போ­சிங்­கிற்­காக வரு­கி­றேன், அங்­கேயே வந்து விடுங்­கள் என்­றார். நடந்தே சென்­றோம்.

பிரம்பு நாற்­கா­லி­யில் பனி­யன் போட்­டுக் கொண்டு கவி­ஞர் அமர்ந்­தி­ருந்­தார். அவ­ரி­டம் ‘‘வசந்­த­கா­லக் கோலங்­கள்.. வானில் விழுந்த கோடு­கள்’’ பாட்டு போல எங்­க­ளுக்கு வேண்­டும் என்­றோம்.

அவர் ஒரு 20 பல்­ல­வி­களை எங்­க­ளுக்­குச் சொன்­னார். எது­வுமே பிடிக்­க­வில்லை. எங்­க­ளுக்கு முழு திருப்தி இல்­லை­யென்­றா­லும் ‘வாழ்க்கை ஓடம் செல்ல’ பல்­ல­வி­யைத் தேர்ந்­தெ­டுத்­தோம். பாட்­டெ­ழு­திக் கொடுத்­தார். படம் வெளி­யாகி பிளாப் ஆன­தும் இப்­படி ஒரு அப­ச­கு­ன­மான பாட்டை முத­லில் எழு­தி­னால் இப்­ப­டித்­தான் ஆகும் என்று கூடச் சொன்­னார்­கள்.