விவசாயி சிவகார்த்திகேயன்!

07 பிப்ரவரி 2019, 07:22 PM

சிவ­கார்த்­தி­கே­யன் தற்­போது எம். ராஜேஷ் இயக்­கத்­தி­லும், ரவிக்­கு­மார் இயக்­கத்­தி­லும் நடித்து வரு­கி­றார். இதில் ராஜேஷ் இயக்­கும் படத்­திற்கு ‘மிஸ்­டர்.லோக்­கல்’ என்று தலைப்பு வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிலை­யில், ரவிக்­கு­மார் இயக்­கும் படம் 60 சத­வீத படப்­பி­டிப்பு முடி­வ­டைந்­தது. படம்­கு­றித்து இயக்­கு­னர் ரவிக்­கு­மார் சொல்லும் போது,

``இது, அறி­வி­யல் சார்ந்த படம். இதில், சிவ­கார்த்­தி­கே­யன் ஜோடி­யாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்­கி­றார். ஏ.ஆர். ரஹ்­மான் இசை­ய­மைக்­கி­றார். நீரவ் ஷா ஒளிப்­ப­திவு செய்­கி­றார். அறி­வி­யல் சார்ந்த படம் என்­ப­தால், படத்­தில் கிரா­பிக்ஸ் காட்­சி­கள் அதி­க­மாக உள்­ளன. இதற்­காக 100-க்கும் அதிகமான ஹாலி­வுட் தொழில்­நுட்ப கலை­ஞர்­கள் வர­வ­ழைக்­கப்­பட்டு, அவர்­கள் இரவு பக­லாக பணி­பு­ரிந்து வரு­கி­றார்­கள்.

ஹாலி­வுட் படங்­க­ளில் மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­பட்ட `அலெக்சா எல்.எப்.' என்ற கேமரா, இந்த படத்­தில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இந்த அதி நவீன கேமரா பயன்­ப­டுத்­தப்­ப­டும் முதல் தமிழ் படம், இது­தான். படப்­பி­டிப்பு சென்னை, ஐத­ரா­பாத், அரக்­கு­வேலி ஆகிய இடங்­க­ளில் நடந்­தது.

இது, சிவ­கார்த்­தி­கே­ய­னுக்கு முக்­கி­ய­மான பட­மாக இருக்­கும். படத்­தில் அவர் விவ­சா­யி­யாக நடிக்­கி­றார். ரகுல் ப்ரீத் சிங், வேலை பார்க்­கும் பெண்­ணாக வரு­கி­றார். கரு­ணா­க­ரன், யோகி பாபு நகைச்­சுவை வேடங்­க­ளில் நடிக்­கி­றார்­கள்.'' என்று கூறி­னார்.