தொடர்ந்து நடிக்க வேண்டும்!

07 பிப்ரவரி 2019, 07:21 PM

புது­முக இயக்­கு­னர் ரஜத் ரவி­சங்­கர் இயக்­கி­யி­ருக்­கும் ‘தேவ்’ படத்­தில் கார்த்தி நாய­க­னா­க­வும் ரகுல் ப்ரீத் சிங் நாய­கி­யா­க­வும் நடிக்­கி­றார்­கள். இப்­ப­டம் பற்றி ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் போது,

‘‘இந்த படம் காதல் கதை மட்­டு­மல்ல. உங்­களை சுற்­றி­யி­ருக்­கும் அனைத்­தை­யும் விரும்ப வேண்­டும் என்று சொல்­லும் படம். இந்த நிமி­டம் உன்­னு­டைய இத­யம் என்ன சொல்­கி­றதோ அதை செய் என்ற கருத்தை வலி­யு­றுத்­தும். இயக்­கு­னர் ரஜத் என் மேல் நம்­பிக்கை வைத்து இந்த கதா­பாத்­தி­ரத்­தைக் கொடுத்­தி­ருக்­கி­றார். கதை கேட்­ட­தும் எனக்கு மிக­வும் பிடித்­தி­ருந்­தது.

கார்த்­தி­யு­டன் பணி­யாற்­று­வது கடி­ன­மாக இருக்­காது. 'தீரன் அதி­கா­ரம் ஒன்று' படத்­தில் எங்­கள் கூட்­டணி வெற்றி பெற்­றது. அது­போல் இப்­ப­டத்­தி­லும் வெற்றி பெறும் என்று நம்­பு­கி­றேன். கார்த்­தி­யு­டன் இன்­னும் பல படங்­க­ளில் இணைந்து பணி­யாற்­றும் வாய்ப்பு கிடைக்க வேண்­டும் என்று விரும்­பு­கி­றேன்’’ என்­றார்.