‘நெஞ்சில் ஒரு ஓவியம்!’

07 பிப்ரவரி 2019, 07:21 PM

‘நெஞ்­சில் ஒரு ஓவி­யம்’ என்ற திரைப்­ப­டம் தயா­ராகி வரு­கி­றது. இதில் ‘தங்­க­ ர­தம்’ படத்­தில் நடித்த  வெற்றி கதா­நா­ய­க­னாக நடிக்­கி­றார். கதா­நா­ய­கி­யாக அக்­ரிஷா நடிக்­கி­றார். இரண்­டா­வது கதா­நா­ய­கி­யாக கே. ஜோதி ­பிள்ளை நடித்­துள்­ளார். மற்­றும் போண்­டா­ மணி,ஜெய­மணி, யூசுப், தள­பதி தினேஷ், பாப்­சு­ரேஷ் ஆகி­யோ­ரும் நடித்­துள்­ள­னர். படம் பற்றி இயக்­கு­னர் கே. ஜோதி ­பிள்ளை கூறி­ய­தா­வது:–

‘‘இது ஒரு காதல், சென்ட்டிமென்ட், காமெடி கலந்த, ஹாரர் திரைப்­ப­டம். மூன்று கோணங்­க­ளில் பய­ணிக்­கும் திரைக்­க­தையை உள்­ள­டக்­கிய கதை இது. இந்த படத்­தில் கதா­நா­யகி அக்­ரி­ஷா­விற்கு முக்­கி­யத்­து­வம் அதி­கம் இருக்­கும் அவரை சுற்­றித்­தான் இந்த மூன்று திரைக்­க­தை­யும் பய­ணிக்­கும். ஓவி­ய­ராக இருக்­கும் நாய­கன் வெற்றி, பெயிண்­டிங் துறை­யில் மிகப்­பெ­ரிய சாதனை புரி­வ­தையே தனது வாழ்­நாள் லட்­சி­ய­மாக கொண்­டி­ருக்­கி­றார். இடை­யில் காத­லில் விழும் அவ­ருக்கு சில பிரச்­னை­கள் வரு­கின்­றன, அந்த பிரச்­னை­க­ளி­லி­ருந்து எப்­படி வெளி­யேறி வாழ்­கை­யில் ஜெயித்­தார் என்­ப­து­தான் கதை’’ என்­றார்.