ரெஜினாவின் துணிச்சல்!

07 பிப்ரவரி 2019, 07:20 PM

தமிழ், தெலுங்கு மொழி­க­ளில் மட்­டும் நடித்து வந்த ரெஜினா, ‘ஏக் லட்கி கோதேக் காதா ஐசா லகா’ என்ற படத்­தின் மூலம் இந்­தி­யில் அறி­மு­கமாகி­றார்.

இந்த படத்­தில் ரெஜினா தான் நடிக்­கும் கேரக்­டரை ரக­சி­ய­மா­கவே வைத்திருந்­தார். படத்­தின் டிரெய்­லர் வெளி­யா­ன­போ­து­தான் சோனம் கபூ­ரும், ரெஜி­னா­வும் இதில் ஓரின சேர்க்­கை­யா­ள­ராக நடிக்­கி­றார்­கள் என்­பது தெரி­ய­வந்­தது.

ரெஜி­னா­வின் இந்த துணிச்­ச­லான முயற்­சிக்கு விமர்­ச­னங்­கள் எழுந்­தன. ஆனா­லும் அமை­தி­யாக இருந்­தார். தற்­போது ரெஜி­னா­வுக்கு பாராட்­டுக்­கள் கிடைத்து வரு­கின்­றன. இது­போன்ற ஒரு கேரக்­ட­ரில் நடிக்க தைரி­யம் வேண்­டும். இந்த வாய்ப்பு எல்­லோ­ருக்­கும் கிடைத்து விடாது என்ற ரீதி­யில் திரைத்­து­றையை சேர்ந்­த­வர்­கள் ரெஜி­னாவை பாராட்டி வரு­கி­றார்­கள்.