கோயிலுக்குள் நடக்கும் கதை!

07 பிப்ரவரி 2019, 07:19 PM

பிரபு சால­மன் உத­வி­யா­ளர் ஏழு­மலை இயக்கியுள்ள படம் ‘அக­வன்.’ ‘ரூபாய்’ படத்­தில் நடித்த கிஷோர் ரவிச்­சந்­தி­ரன் ஹீரோ­வாக நடித்­துள்­ளார், சாய்­ராஸ்ரீ, நித்யா ஷெட்டி என்ற இரு ஹீரோ­யின்­கள் அறி­மு­க­மா­கி­றார்­கள். இவர்­க­ளு­டன் சின்னி ஜெயந்த், தம்பி ராமையா, ஆர்.என்.ஆர். மனோ­க­ரன் உட்பட பலர் நடிக்­கி­றார்­கள். ஆர்.பி.கே.என்டர்டெ யின்மென்ட் சார்­பில் ரவிச்­சந்­தி­ரன் தயா­ரித்­துள்­ளார், சி. சத்யா இசை­ய­மைத்­துள்­ளார். படம் பற்றி இயக்­கு­னர் ஏழு­மலை கூறி­ய­தா­வது:–

‘‘காஞ்­சி­பு­ரம் மாவட்­டத்­தில் உள்ள அனந்­த­மங்­க­லம் என்ற கிரா­மத்­தில் ஆயி­ர­மாண்டு பழ­மை­யான சிவன் கோயில் உள்­ளது. அந்த கோயில்­தான் கதை­க்க­ளம். கோயிலில் ஹீரோ கிஷோர், தம்பி ராமய்யா உட்­பட பலர் வேலை செய்­கி­றார்­கள். அந்த கோயி­லுக்­குள் ஒரு தீய­சக்தி புகுந்து கொள்­கி­றது. அது கோயிலுக்­குள் இருக்­கும் சிலரை ஆட்­டிப்­ப­டைக்­கி­றது. அதை எதிர்த்து ஹீரோ போராடி எப்­படி ஜெயிக்­கி­றார் என்­ப­து­தான் கதை. பெரும்­பா­லான காட்­சி­கள் கோவி­லுக்­குள்­ளேயே பட­மாக்­கப்­பட்­டுள்­ளன. ஆக்­க்ஷன், திகில் கலந்த பேண்­டசி பட­மாக உரு­வாகி உள்­ளது.’’