வளர்ந்து வரும் பாடலாசிரியர்!

05 பிப்ரவரி 2019, 05:24 PM

தேடல், விடாமுயற்சி, திறமை இவற்றின் மறுபெயர் திரைப்பட பாடலாசிரியர் கருணாகரன். சிம்பு, யுவன் கூட்டணியில் உருவான ‘வல்லவன்’ திரைப்படத்தில் அறிமுகமாகி நடிகர் கார்த்திக் நடிப்பில் ‘அலெக்ஸ்பாண்டியன்’ திரைப்படத்தில் ‘பேட் பாய்ஸ்…’ பாடல் மூலமாக அடையாளப்பட்டவர்.

தொடர்ந்து ‘டமால் டுமீல்,’ ‘மதில் மேல் பூனை,’ ‘சென்னை 600028 II,’ ‘நாயகி,’ ‘சக்க போடு போடு ராஜா,’  ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல் எழுதி உள்ள இவர், தற்போது இயக்குனர் ராமின் இயக்கத்தில் வெளியாகி உள்ள ‘பேரன்பு’ திரைப்படத்தில் ‘செத்து போச்சி மனது’ என்ற பாடலில் ஆழமான வரிகளின் மூலம் மீண்டும் யுவன் கூட்டணியில் தனது சிறந்த ஆளுமையை வெளிப்படுத்தி உள்ளார்.

தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி,’ வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘ஜெயில்’ படத்தில் ஒரு குத்து பாடல். உதயநிதி நடிக்கும் பெயர் வைக்காத படத்தில் ஒரு பக்தி பாடல் என கலந்து கட்டி வெளுத்துக்கட்டி கொண்டிருக்கிறார் கருணாகரன்.