அண்ணா ஓவரா இருக்கு!

05 பிப்ரவரி 2019, 05:20 PM

‘மதுர’ படத்தின் போது ‘‘மச்சான் பேரு மதுர’’ பாட்டுக்கு ‘‘நான் கை அசைச்சா எனக்கு கடல் போல கூட்டம் வரும்’’ என பாடலாசிரியர் கபிலன் எழுதினாராம். இதில், ‘எனக்கு கடல் போல கூட்டம் வரும்’ என்ற வரியை குறிப்பிட்டு ‘‘அண்ணா, ஓவரா இருக்கு, கொஞ்சம் குறைச்சுக்கோங்க, எம்.ஜி.ஆர், சிவாஜி இருக்காங்க, பாத்துக்கோங்க’’ என இயக்குனர் மாதேஷிடம் சொல்லி யுள்ளார் விஜய். பின்னர் அதற்கு பதிலாக “கட்டி வெல்லம் உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே” என மாற்றினார்கள்.  அவர் அன்று வேண்டாம் என சொன்னது இன்று உண்மை யாகிவிட்டது என கூறி யுள்ளார் பாடலாசிரியர். இவர் விஜய்க்கு பல பாடல்கள் எழுதியுள்ளார்.