ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 06–2–19

05 பிப்ரவரி 2019, 05:05 PM

மறக்க முடி­யாத இரண்டு படங்­கள்!

(சென்ற வாரத் தொடர்ச்சி)

சிவாஜி நடித்து வெளி­வந்த ‘தியா­கம்’ என்ற படத்­திற்­கும் இளை­ய­ராஜா இசை­ய­மைத்­தி­ருந்­தார். சிவாஜி சித்­த­ரிக்­கும் பாத்­தி­ரங்­க­ளின் மன­சாட்சி குமு­றும் போது காற்­றில் இடி, மின்­னல், மழை கலந்­தி­ருக்­கும். இந்த படத்­தில் “நல்­ல­வர்க்­கெல்­லாம் சாட்­சி­கள் ரெண்டு... ஒன்று மன­சாட்சி” என்று இளை­ய­ரா­ஜா­வின் இசை­யில் கண்­ண­தா­ச­னின் வரி­கள் காற்­றில் மின்­சா­ரம் பாய்ந்­தன. மொத்­தம் 5 பாடல்­கள் இந்த படத்­திற்­காக இளை­ய­ராஜா இசை­ய­மைத்­தி­ருந்­தார்.

சிவாஜி நடித்த படம் என்­ப­தால் டி.எம்.எஸ். இந்த படத்­தில் அதி­கம் பாடி­யி­ருந்­தார். எல்.ஆர். அஞ்­சலி இந்த படத்­தில் ஒரு பாடல் பாடி­யி­ருப்­பார். இளை­ய­ரா­ஜா­வின் இசை­யில் இவர் பாடிய முதல் பாடல் “வருக என் தெய்­வங்­களே…” என்ற பாடல். இதே ஆண்­டில் இவர் இளை­ய­ரா­ஜா­விற்­காக இன்­னொரு பாட­லை­யும் வேறொரு படத்­திற்­கா­கப் பாடி­யி­ருந்­தார்.

ஜானகி பாடிய பாடல்­களை வரி­சைப்­ப­டுத்­தி­னால் அதில் இளை­ய­ராஜா தன் முதல் பட­மான ‘அன்­னக்­கி­ளி’­­யில் இருந்து இவ­ருக்கு எந்த மாதி­ரி­யான பாடல்­களை தந்­தி­ருந்­தார் என்­பது தெரி­யும். அதே போலத்­தான் இந்த படத்­தி­லும் இரண்டு பாடல்­கள். எப்­போ­தும் மறக்க முடி­யாத பாடல்­கள்.

ஜானகி பாடிய அந்த இரண்டு பாடல்­களை கேட்­கும்­போதே நமக்­குள் ஏதோ ஒன்று இறங்­கும்.“வசந்­த­கால கோலங்­கள் வானில் விழுந்த கோடு­கள்”, “தேன் மல்­லிப்­பூவே பூங்­தென்­றல் காற்றே” சிவாஜி  நடித்த படங்­க­ளுக்கு இளை­ய­ராஜா இசை­ய­மைத்த பாடல்­க­ளில் மறக்க முடி­யாத பாடல்­கள் இவை இரண்­டும்.

கமல் நடித்து வெளி­வந்த படம் ‘அவள் அப்­ப­டித்­தான்.’

இந்த ஆண்­டில் கமல் மலை­யா­ளப் படம் ஒன்­றில் நடித்­துக் கொண்­டி­ருந்­தார். இயக்­கு­னர் ருத்­ரைய்யா என்­ப­வர் கம­லி­டம் சென்று தான் ஒரு படம் இயக்­கப்­போ­வ­தா­க­வும், அந்த படத்­தில் நீங்­கள் நடித்­தால் நன்­றாக இருக்­கும் என்­றும் சொல்­லி­யி­ருக்­கி­றார்.

கதை கேட்ட கமல், கதை நன்­றாக இருக்­கி­றது, ஆனால், நான் இப்­போது ஒரு மலை­யா­ளப் படம் ஒன்­றில் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றேன் என்று சொல்ல, இயக்­கு­னர் ருத்­ரைய்யா அந்த படம் முடி­யும் தறு­வா­யில் இருந்­த­தால் அதற்கு ஏற்ப கம­லின் கால்­ஷீட் பெற்று இயக்­கி­னார்.

‘பன்­னீர் புஷ்­பங்­களே,’ ‘உற­வு­கள் தொடர்­கதை’, ‘வாழ்க்கை ஓடம் செல்ல’ என இந்த படத்­தில் மூன்று பாடல்­கள். ‘பன்­னீர் புஷ்­பங்­களே’ என்ற பாட­லை­யும், ‘உற­வு­கள் தொடர்­கதை’ என்ற பாட­லை­யும் எழு­தி­யது கங்கை அம­ரன். இளை­ய­ரா­ஜா­வின் இசை­யில் கமல் பாடிய முதல் பாடல் ‘பன்­னீர் புஷ்­பங்­களே…’ என்ற பாடல்.