செல்வராகவனின் உதவியாளர் இயக்கிய ‘வாண்டு!’

05 பிப்ரவரி 2019, 05:02 PM

இயக்­கு­நர் செல்­வ­ரா­க­வ­னின் உத­வி­யா­ளர் வாசன் ஷாஜி இயக்கி இருக்­கும் படம் ‘வாண்டு’. இயக்­கு­னர் படம் பற்றி கூறும்­போது, ‘‘1971ல் நடந்த உண்மை சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யாக கொண்ட கதை என்­றா­லும் இன்­றைய தலை­மு­றைக்கு ஏற்­ற­வாறு தற்­கா­லத்­தில் நடக்­கும் பட­மா­கவே இருக்­கும்.

சூதாட்­டத்­தில் ஜெயித்­த­வ­னுக்­கும், தோற்­ற­வ­னுக்­கும் இடையே நடக்­கும் போராட்­டம்­தான் கதை. ‘வட­சென்னை’ குப்­பத்து மக்­க­ளின் இயல்­பான வாழ்வு அவர்­க­ளது வீரம், அன்பு, சண்டை, பிரச்னை என அனைத்­தும் எந்த அரி­தா­ர­மும் இல்­லா­மல் இயல்­பாக பதிவு செய்து இருக்­கி­றேன்.

அதே நேரத்­தில் ஒரு சினி­மா­வாக எந்த இடத்­தி­லும் போர­டிக்­கா­மல் விறு­விறு திரைக்­க­தை­யு­டன் பர­ப­ரப்­பான பட­மா­க­வும் இருக்­கும்’’ என்­றார். நாளை மறு­நாள் (பிப்­ர­வரி 8ம் தேதி) ரிலீ­சாக உள்­ள­தாம். படத்­தில் சீனு, ஆல்­வின், எஸ்.ஆர். குணா, ஷிகா, சாய் தீனா, மகா காந்தி, ‘மெட்­ராஸ்’ ரமா, வின்­னர் ராமச்­சந்­தி­ரன் மற்­றும் பலர் நடித்­துள்­ள­னர்.