நடிகர் திலிப்குமார் மருத்துவமனையில் அனுமதி

17 ஏப்ரல் 2016, 05:11 AM

மும்பை, ஏப்.17–

பிரபல பாலிவுட் நடிகர் திலிப்குமார். மும்பையில் வசித்து வருகிறார். 60 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர் பத்மவிபூஷன், தாதா சாகேப் பால்கே விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். இவர் நடித்த மதுமதி, தேவதாஸ் உள்பட  ஏராளமான படங்கள் புகழ்பெற்றவை.   இப்போது சுவாச கோளாறு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் திலிப்குமாரை அனுமதித்து இருக்கிறார்கள். 93 வயதான அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கவலைப்படும்படியாக எதுவும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.