உல்­லாலா...!

11 ஜனவரி 2019, 04:06 PM

‘கபாலி’ படத்­தி­லி­ருந்து ரஜினி நடிக்­கும் படங்­க­ளுக்கு மலே­சி­யா­வில் நல்ல வர­வேற்பை பெற்று வரு­கி­ற­தாம். தற்­போது ரிலீ­சாக உள்ள ‘பேட்ட’ படத்­திற்­கும் பெரிய எதிர்பார்ப்பு உரு­வாகி உள்­ளது என்­கி­றார் இப்­ப­டத்தை அங்கு வெளி­யி­டும் மாலிக் ஸ்ட்ரீம் நிறு­வ­னத்­தின் தலைமை அதி­காரி மாலிக். இது பற்றி அவர் மேலும் கூறி­ய­தா­வது:–

‘‘ரஜி­னி­காந்த் நடிப்­பில் தற்­போது உரு­வாகி இருக்­கும் படம் ‘பேட்ட’. சன் பிக்­சர்ஸ் நிறு­வ­னம் தயா­ரித்­துள்ள இப்­ப­டத்தை கார்த்­திக் சுப்­பு­ராஜ் இயக்­கி­யுள்­ளார். இப்­ப­டம் பொங்­கல் பண்­டி­கையை முன்­னிட்டு நேற்று இப்­ப­டம் வெளி­யா­னது.

மலே­சி­யா­வில் பல கார்­க­ளில் ‘பேட்ட’ படத்­தின் போஸ்­டர்­கள் ஒட்­டப்­பட்­டன. அது­போல் பேருந்­து­க­ளில் ஒட்­டப்­பட்ட போஸ்­டர்கள் அதிக ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளன. தற்­போது மலே­சி­யா­வின் முக்­கிய வீதி­க­ளி­லும் மக்­கள் அதி­கம் கூடும் இடங்­க­ளில் வீடி­யோக்­கள் ஒளி­ப­ரப்­பட்டு வரு­கி­ன்றன.

இதை பார்த்த ரஜினி ரசி­கர்­க­ளி­டையே அதிக தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. ரஜினி ரசி­கர்­கள் மட்­டு­மில்­லா­மல் மற்ற ரசி­கர்­க­ளி­டை­யேயும் அதிக எதிர்பார்ப்பையும் ஏற்­ப­டுத்தி இருக்­கி­றது. இப்­ப­டத்­தில் இடம்­பெற்­றுள்ள ‘‘உல்­லாலா..’’ பாடலை மலாய் பாட­கர்கள் அஸ்­வான், முவாட்ஸ் இரு­வ­ரும் தமிழ்­மொ­ழி­யில் பாடி அசத்­தி­யுள்­ள­னர். தற்­போது, இந்த வீடியோ வைர­லாகி வரு­கி­றது’’ என்­றார்.