ரவுண்டு கட்­டு­கி­றார்!

11 ஜனவரி 2019, 04:04 PM

‘ஐங்­க­ரன்’, ‘அடங்­காதே’, ‘குப்­பத்து ராஜா’, ‘ஜெயில்’, ‘வாட்ச்­மேன்’, 100% காதல்’, ‘காத­லைத் தேடி நித்­யா-­நந்தா,’ ‘ரெட்­டைக் கொம்பு’, ‘சர்­வம் தாள­ம­யம்’, ‘4-ஜி’ என ஜி.வி. பிர­கா­ஷுக்கு பத்து படங்­கள் கைவ­சம் இருக்­கின்­றன. வாய்ப்­பும், கரன்­சி­யும் கொட்­டு­தே என கிடைத்த படங்­களை எல்­லாம் ஒப்­புக்­கொண்­டார். ஆனா எந்த படம் எப்ப ரிலீ­சா­கும்னு அவ­ருக்­கும் தெரி­யாது, அவரை வச்சு படம் எடுக்­கும் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்­கும் தெரி­யாது.

‘ஐங்­க­ர­னில்’ மஹிமா நம்­பி­யார், ‘100% காதல்’ படத்­தில் ஷாலினி பாண்டே, வசந்த பால­னின் ‘ஜெயில்’ புது­மு­கம் அபர்­ணதி, ‘குப்­பத்து ராஜா’­வில் பாலக் லால்­வாணி என்ற புது­மு­கம் மற்­றும் பூனம் பாஜ்வா, ராஜீவ் மே­ன­னின் ‘சர்­வம் தாள­ம­ய’த்­தில் அபர்ணா பால­மு­ரளி என பிர­ப­லங்­க­ளும் புது­மு­கங்­க­ளும் கலந்து கட்­டி­யி­ருக்­கி­றார்­கள். பிர­பல டைரக்­டர்­கள் இரு­வர் இருக்­கி­றார்­கள். ஆனா­லும் எல்லா படங்­க­ளுமே ரொம்­ப­வும் ஸ்லோவாக போய்க் கொண்­டி­ருக்­கின்­றன.