விஷால் வெளி­யிட்ட ‘அகோரி’ டீசர்!

08 ஜனவரி 2019, 04:24 PM

ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா, மோஷன் பிலிம் பிக்­சர் சுரேஷ் கே. மேன­னு­டன் இணைந்து 'அகோரி' படத்தை தயா­ரிக்­கி­றார். இப்­ப­டத்தை இயக்­கு­ப­வர் அறி­முக இயக்­கு­நர் டி.எஸ். ராஜ்­கு­மார் .

‘‘சிவ­ன­டி­யா­ராக உள்ள ஓர் அகோ­ரிக்­கும் தீய சக்­தி­க­ளுக்­கு­மி­டையே நடக்­கும்  போராட்­டமே கதை. இது ஒரு முழு­மை­யான ஆக்­க்ஷன், த்ரில்­லர்,  காமெடி, காதல்,  சென்­டி­மென்ட் எல்லா அம்­சங்­க­ளும் உள்ள   படம். ஆறி­லி­ருந்து அறு­பது வரை அனைத்து வய­தி­ன­ருக்­கு­மான  வணிக அம்­சங்­கள் படத்­தில் இருக்­கும்.

சர்­வ­தேச அள­வில் புகழ் பெற்ற நடி­கர் சாயாஜி ஷிண்டே இதில் அகோ­ரி­யாக நடிக்­கி­றார். அவர் தேர்ந்­தெ­டுத்த படங்­க­ளில் மட்­டுமே நடிப்­ப­வர். படத்­தின் கதை, தன் தோற்­றம் எல்­லா­வற்­றை­யும் கேட்­ட­தும் உடனே நடிக்க சம்­ம­தித்து இருக்­கி­றார்.

மிக­வும் ஈடு­பாடு காட்டி நடித்து வரு­கி­றார்’’ என்­கி­றார் இப்­பட இயக்­கு­னர் டி.எஸ். ராஜ்­கு­மார். சமீ­பத்­தில் இப்­ப­டத்­தின் டீசரை வெளி­யிட்ட நடி­கர் விஷால், படக்­கு­ழு­வி­னரை வெகு­வாக பாராட்­டி­யுள்­ளார். 'அகோரி' படத்தை  விரை­வில் வெளி­யிட உள்­ளார்­க­ளாம்.