கதாநாயகியின் தேர்வு நியாயமானது!

08 ஜனவரி 2019, 04:20 PM

'ஸரோமி மூவி கார்­லேண்டு' நிறு­வ­னம் சார்­பில் ஆர். தங்­கப்­பாண்டி தயா­ரிப்­பில் உரு­வாகி இருக்­கும் படம் ‘ரூட்டு’. ஏ.சி. மணி­கண்­டன் இயக்­கி­யுள்ள இந்த பaடத்­தில் கதா­நா­ய­க­னாக கவித்­ரன், கதா­நா­ய­கி­யாக மது­மிதா மற்­றும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளில் மைம் கோபி, அப்­புக்­குட்டி, கூல் சுரேஷ் ஆகி­யோர்  நடித்­துள்­ள­னர். இந்த படத்­திற்கு விஜய் பிரபு இசை­ய­மைத்­துள்­ளார். இந்த படத்­தின் இசை வெளி­யீட்டு விழா சமீ­பத்­தில் சென்­னை­யில் நடை­பெற்­றது.

படத்­தின் இயக்­கு­னர் மணி­கண்­டன் பேசும்­போது, “இந்த படத்தை முத­லில் வேறொரு தயா­ரிப்­பா­ளர் தயா­ரிப்­ப­தாக இருந்­தது. இடை­யில் சில கார­ணத்­தால் அவர் அதி­லி­ருந்து வில­கி­விட, அந்த நேரத்­தில் என்­னி­டம் உதவி இயக்­கு­ன­ராக இருந்த தங்­கப்­பாண்­டி­தான், இது அரு­மை­ யான படம் இதை கிடப்­பில் போட்டு விடக்­கூ­டாது என கூறி தன்­னு­டைய சக்­திக்கு மீறி இந்த படத்தை தானே தயா­ரிக்க முன்­வந்­தார். அதே­போல இந்த படத்­தில் நாய­கி­யாக நடிக்க இருந்­த­வர் படத்­தின் முதல் நாள் திடீ­ரென வர முடி­யாது என கூறி விட, குறைந்த கால அவ­கா­சத்­தில் கதா­நா­ய­கி­யாக இந்த படத்­திற்­குள் வந்­த­வர்­தான் இந்த மது­மிதா. ஆனா­லும், முதல் நாள் முதல் ஷாட்­டி­லேயே அவ­ரு­டைய தேர்வு நியா­ய­மா­னது என்­பதை நிரூ­பித்து விட்­டார்” என கூறி­னார்.