தயா­ரிப்­பா­ளர்­க­ளான முன்­னாள் மாண­வர்­கள்!

08 ஜனவரி 2019, 04:19 PM

ஒரு சிலிர்ப்­பான சர்ப்­ரை­ஸாக, தங்­க­ளு­டைய வகுப்­புத் தோழன், சினி­மா­வில் நல்­ல­ப­டி­யாக வரட்­டுமே என்ற ஒரே கார­ணத்­துக்­காக 50 முன்­னாள் மாண­வர்­கள் தயா­ரிப்­பா­ளர்­க­ளாக மாறி­யி­ருக்­கி­றார்­கள். இயக்­கு­ந­ரின் பெயர் செல்­வ­கண்­ணன். படம் ‘நெடு­நல் வாடை.’

2000ம் ஆண்டு நெல்லை சங்­கர் பாலி­டெக்­னிக்­கில் படித்­த­வர் கண்­ணன். இவ­ரு­டன் படித்த நண்­பர்­க­ளில் 90 சத­வி­கி­தம் பேர் இந்­தி­யா­வி­லும், வெளி­நா­டு­க­ளி­லும் பெரு­நி­று­வ­னங்­க­ளில் பொறி­யா­ளர்­க­ளாக வேலை செய்­கி­றார்­கள். இவர்­க­ளில் 50 பேர் வாட்ஸ் ஆப்­பில் ஒரு குழு உரு­வாக்கி மொத்த மாண­வர்­க­ளும் தங்­கள் சம்­ப­ளத்­தில் குறிப்­பிட்ட சத­வி­கி­தத்தை கண்­ணன் இயக்­கும் படத்­துக்கு முத­லீடு செய்­வ­தாக உறுதி அளித்­தார்­கள். இது கதை­யல்ல நிஜம்.

உறு­தி­மொ­ழி­யில் இருந்து  கடந்த ஒரு வரு­டத்­தில் ஒரு­வர் கூட பின்­வாங்­காத நிலை­யில், சினி­மா­வில் வழக்­க­மாக சந்­திக்­கும் சில சங்­க­டங்­க­ளைக் கடந்து ‘நெடு­நல் வாடை’ வரும் மார்ச்­சில் திரைக்கு வரு­கி­றது.

படத்­தின் கதை குறித்­துப் பேசிய இயக்­கு­நர் செல்­வ­கண்­ணன், ‘‘மகன்­வ­ழிப் பேரன்,பேத்­தி­க­ளுக்­குக் கிடைக்­கும் சொத்­து­ரிமை,  அங்­கீ­கா­ரம்  சமூ­கத்­தில் மகள் வழி உற­வு­க­ளுக்கு கிடைப்­ப­தில்லை. குறிப்­பாக ஈமக்­க­டன்­க­ளில் கூட அவர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை என்­பதை அழுத்­த­மாக பதிவு செய்­தி­ருக்­கி­றேன்’’ என்­கி­றார்.

இப்­ப­டத்­தில் ‘பூ’ ராமு, இளங்கோ, அஞ்­சலி நாயர், அஜய் நட­ராஜ், மைம் கோபி, ஐந்து கோவி­லான், செந்­தில் உட்­பட பலர் நடித்­துள்­ளார்­கள்.