இளகிய மனதுடையவராக இருக்க வேண்டும்!

05 டிசம்பர் 2018, 05:31 PM

'இமைக்கா நொடிகள்' படத்தை அடுத்து 'அடங்க மறு,' 'அயோக்யா' படங்களில் நடிக்கும் ராஷி கண்ணா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். சினிமாவில் இவரது பயணம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

திருமணம் பற்றி ராஷி கண்ணா கூறியிருப்பதாவது:– ''சினிமா பயணம் நன்றாக போய்க் கொண்டிருக்கும் போதும் எனது பெற்றோர் திருமணம் செய்ய வலியுறுத்தி வருகிறார்கள். அதனால் இன்னும் சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்வேன். எனது வருங்கால கணவர் சினிமாவை புரிந்து கொண்டவராகவும், இளகிய மனம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். அவர்களிடம்தான் காதல் இருக்கும்.''