'பேட்ட' வௌியீடு!

05 டிசம்பர் 2018, 05:29 PM

ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'பேட்ட'யின் இறுதி கட்ட வேலைகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வர, இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இம்மாதம் வருகிற 9ம் தேதி நடைபெறவிருக்கிறது!

இந்நிலையில், இப்படத்தின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளன. லேட்டஸ்டாக நமக்கு கிடைத்த தகவலின்படி ‘பேட்ட’யின் உலகளாவிய விநியோக உரிமையை ரஜினி நடிப்பில் ‘கபாலி’ உட்பட பல படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பாளரான ‘கலைப்புலி’ எஸ். தாணு வாங்கியிருக்கிறாராம். இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.