ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 5–12–18

04 டிசம்பர் 2018, 04:35 PM

இளை­ய­ரா­ஜா­வுக்கு சர்வதேச விருது!

(சென்ற வாரத் தொடர்ச்சி)

'''சின்ன தம்பி' படத்­தில் குஷ்பு தாலி தெரி­யும் முக்­கி­ய­மான காட்­சி­யில் பின்­னணி இசை இல்­லா­மல் விட்­டு­விட்­டார். அதை பற்றி நான் கேட்ட போது ''இயக்­கு­வது உன் வேலை, இசை­ய­மைப்­பது என் வேலை'' என்று தெரி­வித்­து­விட்­டார். படம் வெளி­யாகி தியேட்­ட­ரில் நான் பார்க்­கும் போது அக்­காட்­சிக்கு அனை­வ­ரும் உச்­சுக் கொட்­டி­னார்­கள். நான் இளை­ய­ராஜா அண்­ண­னி­டம் சொல்ல வந்­தேன். அப்­போது "அக்­காட்­சிக்கு உச்­சுக் கொட்­டி­னார்­களா? அதற்­குத்­தான் அக்­காட்­சிக்கு நான் பின்­னணி இசை அமைக்­க­வில்லை" என்று தெரி­வித்­தார். எந்த காட்­சிக்கு பின்­னணி இசை தேவை யில்லை என்று தெரிந்த ஒரே இசை­ய­மைப்­பா­ளர் இளை­ய­ராஜா மட்­டுமே" என்று தன் பேச்­சில் குறிப்­பிட்­டார் இயக்­கு­நர் பி. வாசு.

* நாய­கி­கள் ராதா, பூர்­ணிமா பாக்­ய­ராஜ், மீனா, பானுப்­ரியா, கவு­தமி ஆகி­யோர் மேடை­யேறி இளை­ய­ரா­ஜா­வின் பாடல்­கள் அனு­ப­வத்தை பகிர்ந்து கொண்­டார்­கள்.

* "சார்.. என்னை பார­தி­ராஜா உங்­க­ளி­டம் இவ­தான் நாயகி என்று அறி­மு­கப்­ப­டுத்­திய போது "இதான் கப்­பக்­கி­ழங்கா?" என்று கேட்­டீர்­கள் அது ஏன்?" என்று இளை­ய­ரா­ஜா­வி­டம் கேள்வி எழுப்­பி­னார் ராதா. அதற்கு இளை­ய­ராஜா "யாரை­யும் அப்­படி சொல்­லும் பழக்­கம் எனக்­கில்லை. நாய­கி­யாக ஒப்­பந்­தம் ஆகும் முன்பே "வாடி என் கப்­பக்­கி­ழங்கே" பாடலை பதிவு செய்­து­விட்­டோம். அத­னால்­தான் அவ்­வாறு சொன்­னேன்" என்று பதி­ல­ளித்­தார் இளை­ய­ராஜா.

* ராதா, பூர்­ணிமா பாக்­ய­ராஜ், மீனா, பானுப்­ரியா, கவு­தமி அனை­வ­ரும் மேடை­யில் இருக்­கும் போதே கமலை அரங்­கி­னுள் அழைத்­தார்­கள். அப்­போது "கமலை அனைத்து நாய­கி­க­ளும் அழைத்­துச் சென்று இளை­ய­ரா­ஜா­வுக்கு அரு­கில் அமர வைப்­பார்­கள்" என்று தெரி­வித்­தார் தொகுப்­பா­ளர் டிடி.

* பின்­னணி பாட­கி­கள் சுசீலா, உமா, சைலஜா, சித்ரா, ஜென்ஸி ஆகி­யோர் இளை­ய­ரா­ஜா­வின் இசைக்கு பாடிய தங்­க­ளது அனு­பங்­களை பகிர்ந்து கொண்­டார்­கள்.

* பாட­கர் மனோ "இந்த வாழ்க்கை இளை­ய­ராஜா போட்ட பிச்சை" என்று தனது பேச்­சில் குறிப்­பிட்­டார். தொடர்ந்து "மாங்­கு­யிலே", "இளமை என்­னும் பூங்­காற்று" ஆகிய பாடல்­க­ளைப் பாடி­னார்.

* இயக்­கு­நர் கவு­தம் மேனன், பாட­கர் கார்த்­திக் மற்­றும் கிட்­டார் பிர­சன்னா ஆகி­யோர் இணைந்து 'இளை­ய­ராஜா UNPLUGGED' என்ற பெய­ரில் "கோடை கால காற்றே", "நீதானே என் பொன்­வ­சந்­தம்", "காற்­றைக் கொஞ்­சம்", "ராசாவே உன்னை நம்பி" உள்­ளிட்ட 6 பாடல்­க­ளைப் பாடி­னார்­கள்.

* பலத்த கர­கோ­ஷத்­திற்கு இடையே மேடை­யில் தோன்­றி­னார் எஸ்.பி.பால­சுப்­பி­ர­ம­ணி­யம். "நான் இளை­ய­ரா­ஜாவை பற்றி என்ன பேசு­வது? அவ­ரு­டைய பாடல்­க­ளில் 90% ஆண் குரல் நான் பாடி­ன­து­தான். ஆகை­யால், நான் பாடி­னால் போதும் என நினைக்­கி­றேன்' என்று பாடத் தொடங்­கி­னார்.

* "என்ன சத்­தம் இந்த நேரம்", 'ஓ ப்ரியா ப்ரியா', 'இளைய நிலா பொழி­கி­றதே', 'சுந்­தரி கண்­ணால் ஒரு சேதி', 'ஜோதி­லேகே (கன்­ன­டம்)' ஆகிய பாடல்­க­ளைப் பாடி அனை­வ­ரை­யும் இசை வெள்­ளத்­தில் மூழ்­கச் செய்­தார். இவர் பாடும் போது பிர­காஷ்­ராஜ், கார்த்­திக், குஷ்பு ஆகி­யோர் பலத்த கர­வொலி எழுப்பி தங்­க­ளு­டைய சந்­தோ­ஷத்தை வெளிப்­ப­டுத்­தி­னார்­கள்.

* 'இளைய நிலா பொழி­கி­றதே' என்ற பாடலை பாடி முடித்­த­வு­டன், "இப்­பா­ட­லின் பின்­னணி இசை­யில் புளூட் இசை ரொம்ப சாதா­ர­ண­மாக தெரி­யும். ஆனால் அதை யாரா­லும் மறு­ப­டி­யும் கொண்டு வர முடி­யாது. அது தான் இளை­ய­ராஜா!" என்று குறிப்­பிட்­டார் எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்.

* 'சுந்­தரி கண்­ணால் ஒரு சேதி' பாட­லைப் பாடி முடித்­த­வு­டன், "இப்­பா­டலை மும்­பை­யில் பதிவு செய்­தோம். இன்­னும் ஞாப­கம் இருக்­கி­றது. இப்­பா­டல் பதிவு முடிந்­த­வு­டன் அனைத்து இசைக் கலை­ஞர்­க­ளும் எழுந்து நின்று கை தட்­டி­னார்­கள்" என்று தெரி­வித்­தார் எஸ்.பி.பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

* ஜெய­ராம், குஷ்பு, வெங்­க­டேஷ் ஆகி­யோர் மேடை­யில் தங்­க­ளு­டைய வாழ்க்­கை­யில் இளை­ய­ராஜா இசை­யின் பங்கு குறித்து பேசி­னார்­கள்."காரில் நீண்ட தூர பய­ணம் செல்­லும் போது பெட்­ரோல் இருக்­கி­றதா என்று பார்ப்­பது போல இளை­ய­ரா­ஜா­வின் சிடி இருக்­கி­றதா என்று பார்ப்­போம். அது­தான் இளை­ய­ராஜா" என்று தன் பேச்­சில் குறிப்­பிட்­டார் குஷ்பு.

* இளை­ய­ரா­ஜா­வின் இசைச் சாத­னை­யைப் பாராட்டி இந்­நி­கழ்ச்­சி­யில் அவ­ருக்கு லக்ஷ்மி நாரா­யணா சர்­வ­தேச விருது வழங்­கப்­பட்­டது. எல்.சுப்­பி­ர­ம­ணி­யம் இந்த விருதை வழங்­கி­னார்.

* இளை­ய­ராஜா மற்­றும் கமல் ஒன்­றாக மேடை­யே­றி­னார்­கள். அப்­போது 'மரு­த­நா­ய­கம்' படத்­தின் சில காட்­சி­கள் திரை­யி­டப்­பட்­டன. அப்­ப­டத்­திற்­காக இளை­ய­ராஜா இசை­யில் கமல் பாடிய "பொறந்­தது பனை­யூரு மண்ணு" என்று பாடலை இரு­வ­ருமே மேடை­யில் பாடி­னார்­கள். அத­னைத் தொடர்ந்து 'மரு­த­நா­ய­கம்' படம் மீண்­டும் தொடங்­கப்­பட இருப்­ப­தாக தன்­னு­டைய பேச்­சில் கமல் குறிப்­பிட்­டார்.