ராஜாவாதான் வருவேன்!

08 நவம்பர் 2018, 07:35 PM

திரிவிக்ரம் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அத்தாரின்டிகி தாரேதி’. பவன் கல்யாண், - சமந்தா, பிரணீதா இணைந்து நடித்த அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்கி வரும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் கேத்ரின் தெரசா, யோகி பாபு, மகத், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடத்தி வந்த படக்குழுவினர் தற்போது படத்திற்கு ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படம் பொங்கல் திருநாளன்று வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இது சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.