ராஜேந்திர சோழன் விக்ரம்!

08 நவம்பர் 2018, 07:34 PM

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை ராஜேஷ் எம். செல்வா இயக்க, விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.  'கடாரம் கொண்டான்' என்று வித்தியாசமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் விக்ரமின் தோற்றம் மிரள வைக்கும் விதமாக அமைந்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ‘கடாரம் கொண்டான்’ என்றால் என்ன என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூரில் உள்ள புகழ் பெற்ற பெரிய கோயிலை கட்டியவர் ராஜராஜ சோழன். அவருக்கு மகனாக பிறந்தவர் ராஜேந்திர சோழன். வீரத்திலும், விவேகத்திலும் சிறந்து விளங்கியவர் ராஜேந்திர சோழன். இவர் மலேசியாவில் உள்ள கெடா பகுதி வரை போர் தொடுத்து, அதில் வென்று அந்த பகுதியை தன் கைவசப்படுத்தியதால் அவருக்கு ‘கடாரம் கொண்டான்’ என்று பட்டம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த விஷயத்துக்கும், இப்படத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை!

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அக்க்ஷரா ஹாசன் நடிக்க, இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ஸ்ரீனிவாஸ் குத்தா கவனிக்கிறார்.