'திமிரு புடிச்சவன்' ரிலீஸ்!

08 நவம்பர் 2018, 07:33 PM

விஜய் ஆண்டனி நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்தை தீபாவளி அன்று வெளியிடுவோம் என்று உறுதியாக அறிவித்தனர். ஆனால், படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை. ஆனால், இம்மாதம் 16ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. பின்னர் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் ஏற்பட்ட பிரச்னையினால் 'திமிரு புடிச்சவன்' படம் இம்மாதம் வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டது.

தமிழ்நாடு திரையரங்க உரிமையை பெற்ற விநியோகஸ்தர், ஏற்கனவே வெளியிட்ட 'சண்டக்கோழி -2' படத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த நேரத்தில் 'திமிரு புடிச்சவன்' படத்தை வெளியிட்டால் மிகப்பெரிய பிரச்னை வரும் என்பதால் படத்தை விஜய் ஆண்டனி யிடமே திருப்பிக் கொடுக்க முடிவு செய்தாராம்.

தற்போதைய தகவலின்படி 'திமிரு புடிச்சவன்' படத்தை மீண்டும் அதே விநியோகஸ்தரிடமே  டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் கொடுத்து படத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறாராம் விஜய் ஆண்டனி. 'காளி' படத்தில் ஏற்பட்ட நஷ்டம் சம்பந்தப்பட்ட தொகையை விநியோகஸ்தருக்குக் கொடுத்தால்தான் 'திமிரு புடிச்சவன்' படம் வெளியாகும் என்ற நிலையில் அதை கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார் விஜய் ஆண்டனி.