தாய்­லாந்­தில் ஜோடி!

03 நவம்பர் 2018, 07:39 PM

கே புரொ­டக்­க்ஷன்ஸ் எஸ்.என். ராஜ­ரா­ஜன், ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் யுவன் சங்­கர் ராஜா, இர்­பான் மாலிக் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற  படத்தை தயா­ரித்­தி­ருந்­தார்­கள்.

தற்­போது விஜய் சேது­பதி, அஞ்­சலி நடிக்­கும் புதிய படம் ஒன்­றை­யும் தயா­ரித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ''இந்த படத்­தின் முதல் கட்ட படப்­பி­டிப்பு தென்­காசி, குற்­றா­லம் போன்ற இடங்­க­ளில் 30 நாட்­கள் நடை­பெற்று முடி­வ­டைந்­தது.

இதைத் தொடர்ந்து இரண்­டாம் கட்­ட படப்­பி­டிப்பு தாய்­லாந்­தில் தொடங்­கி­யது. 40 நாட்­கள் இடை­வி­டா­மல் தாய்­லாந்து அதை சுற்றி உள்ள இடங்­க­ளில் மிகப் பிரம்­மாண்­ட­மான முறை­யில் பட­மாக்­கப்­பட உள்­ளது.

விஜய் சேது­பதி நடிப்­பில் உரு­வா­கும் இப்­ப­டத்­தின் பெரும்­ப­குதி வெளி­நாட்­டில் பட­மா­கி­றது என்­பது சிறப்­பம்­சம்.

அந்­த­ள­வுக்கு கதை­யும் சூழ­லும் அமைந்­துள்­ள­தால், படப்­பி­டிப்பை வெளிநாடு­க­ளில் நடத்­து­கி­றோம்'' என்­கி­றார் இயக்­கு­னர் அருண்­கு­மார். 'சேது­பதி' படத்­தின் வெற்­றி­யைத் தொடர்ந்து அருண்­கு­மார் இயக்­கும் கமர்­ஷி­யல் பார்­மு­லா­வு­டன் கூடிய வித்­தி­யா­ச­மான பட­மான இதன் தலைப்பு விரை­வில் அறி­விக்­கப்­பட உள்­ளது.