எதிர்ப்பு!

03 நவம்பர் 2018, 07:38 PM

சமீ­ப­கா­ல­மாக 'மீ டூ' விவ­கா­ரங்­க­ளில் டுவிட்­ட­ரில் பல கருத்­துக்­களை தெரி­வித்து வந்­தார் நடி­கர் சித்­தார்த்.

தற்­போது படங்­க­ளுக்கு சாதிய பெயர் வைப்­பது பற்றி தன் கருத்தை டுவிட்­ட­ரில் பதிவு செய்­துள்­ளார். அது பற்றி அவர் கூறி­யி­ருப்­ப­தா­வது...

''சாதி ஆண­வத்தை பற்றி பேசும் படங்­க­ளுக்கு எதி­ராக தமி­ழில் நல்ல படங்­களை எடுக்க வேண்­டும். குறிப்­பிட்ட சாதியை உயர்த்தி பேசும் பட தலைப்­பு­க­ளுக்­கும் கதை மற்­றும் வச­னங்­க­ளுக்­கும் எதிர்ப்பு தெரி­விக்க வேண்­டும். சாதி என்­பது மனி­த­னால் உரு­வாக்­கப்­பட்ட ஒரு சாபம். அனை­வ­ரும் ஒன்று சேர்ந்து அதை முடி­வுக்கு கொண்டு வர வேண்­டும்.

நான் ஒரு அமா­னுஷ்ய படம் எடுத்­த­போது சமூ­கத்­தில் நாங்­கள் இது­போன்ற நம்­பிக்­கை­களை ஊக்­கு­விக்­க­வில்லை என்று தணிக்கை குழு­வி­னர் அறி­விக்­கும்­படி கூறி­னார்­கள்.

இதே முறையை சாதிரீதி­யி­லான படங்­க­ளி­லும் தணிக்கை குழு­வி­னர் பின்­பற்­ற­லாம்’’ என்­றார்.