நானும் அர­சி­ய­லுக்கு வரு­கி­றேன்!

03 நவம்பர் 2018, 07:36 PM

'போடா போடி' படம் மூலம் அறிமுகமா­ன­வர் வர­லட்­சுமி சரத்­கு­மார்.

சமீ­பத்­தில் வெளி­யான 'சண்­டக்­கோழி -2' படத்­தில் வில்­லி­யாக நடித்து உள்­ளார். அடுத்து விஜய்­யு­டன் 'சர்­கார்' படத்­தில் நடித்து இருக்­கி­றார்.

அவர் அளித்­துள்ள பேட்­டி­யில் கூறி யிருப்­ப­தா­வது:– -''நடி­கர் விஷால் எனக்கு நெருக்­க­மான நண்­பர். எல்லா விஷ­யங்­க­ளை­யும் இரு­வ­ரும் பகிர்ந்து கொள்­வோம். ஆனால் அவ­ரும் நானும் காத­லிப்­ப­தா­கவோ, டேட்­டிங் செல்­வ­தா­கவோ வரும் தக­வல்­க­ளில் உண்மை இல்லை.

விஷா­லுக்கு திரு­ம­ணத்­திற்கு பெண் பார்த்­தால், நானே பெண் பார்த்து திரு­ம­ணம் செய்து வைக்க தயார். அவர் திரு­ம­ணம் செய்­தால் மகிழ்ச்­சி­ய­டை­ய போவ­தும் நான்­தான். எதற்­காக விஷா­லு­டன் என்னை இணைத்து பேசு­கி­றார்­கள் என்­ப­து­தான் புரி­ய­வில்லை.

தமி­ழ­கத்­தில் அர­சி­யல் காலி­யி­டம் உள்­ளது உண்­மை­தான். அந்த காலி­யி­டத்தை நிரப்­பத்­தான் ரஜி­னி­காந்த், கமல்­ஹா­சன் உள்­ளிட்­டோர் முயற்சி செய்­கி­றார்­கள். ஆனால் மக்­கள் அதை ஏற்­றுக் கொள்­கி­றார்­களா என்­பதை பொறுத்­தி­ருந்­து­தான் பார்க்க வேண்­டும்.

ஜெய­ல­லிதா சிறப்­பான ஆளுமை மிக்க தலை­வர். இது­வரை அவரை மூன்று முறை சந்­தித்து பேசும் வாய்ப்பு கிடைத்­தது. அர­சி­ய­லில் அவர் எனக்கு உந்து சக்­தி­யாக உள்­ளார். சிறப்­பான ஆட்­சி­யா­ளர், சிறப்­பான கல்­வி­யா­ளர். தனி­யொரு பெண்­ம­ணி­யாக மொத்த மாநி­லத்­தி­லும் ஆளுமை செலுத்­தி­னார்.

இன்­னும் ஐந்து வரு­டங்­க­ளில், அர­சி­ய­லுக்கு வரு­வேன். எனது தந்தை அவ­ரது கட்­சி­யில் சேர்­வ­தற்கு ஏற்­க­னவே அழைப்பு விடுத்­தார். நான்­தான் மறுத்து விட்­டேன். நான் தந்தை கட்­சி­யில் சேர்ந்து அர­சி­ய­லுக்கு வர மாட்­டேன். எந்த கட்­சி­யில் சேரு­வேன் என்­பதை பிறகு தெரி­விக்­கி­றேன்.’