தெனா­வட்டு போதாது!

03 நவம்பர் 2018, 07:32 PM

சமீ­பத்­தில் வெளி­வந்த 'சண்­டக்­கோழி 2' படத்­தில் வில்­ல­னாக அரி­மு­க­மா­ன­வர் அர்­ஜெய். அந்த வாய்ப்பு பற்றி அவர் கூறி­ய­தா­வது:–

''என் நண்­பர் மூலம் 'சண்­டக்­கோழி 2' படத்­துக்கு நடி­கர்­கள் தேர்­வா­கும் ஆடி­ஷன் நடக்­கி­றது என்று அறிந்­தேன். நான் நேரில் சென்­றேன். இப்­ப­டித்­தான் தேர்­வா­னேன்.

இந்த படத்­துக்­காக சுமார் 70 நாட்­கள் படப்­பி­டிப்­பில் கலந்து கொண்­டேன். ஆரம்­பத்­தில் நடிப்­பது பற்­றிப் பெரி­தா­கப் பேசா­மல் தானுண்டு நடிப்­புண்டு என்­றி­ருந்த அண்­ணன் விஷால் என் சம்­பந்­தப்­பட்ட காட்­சி­கள் வரும் போது நன்­றா­க செய்ய பெரி­தும் ஊக்­கப்­ப­டுத்­தி­னார்.

குறிப்­பாக அந்த பஞ்­சா­யத்­துக் காட்­சி­யில் என் நடிப்பு சிறப்­பாக அமைய பெரி­தும் அக்­கறை காட்­டி­னார்.

 ராஜ்­கி­ரண் என்­கிற பெரிய நடி­க­ரு­டன் நடிப்­பது எப்­படி? திரை­யில் அவர் வந்து விட்­டால் அவர் மட்­டும்தானே தெரி­வார்? இந்த பயம் எனக்­குள் இருந்­தது.

முதல் நாள் படப்­பி­டிப்பு போனது. பஞ்­சா­யத்து காட்­சி­யில்  நாம் சரி­யா­க செய்­தோமா என்று பய­மாக இருந்­தது. மறு­நாள் ராஜ்­கி­ரண் சார் என்னை தம்பி இங்கே வா என்று கூப்­பிட்­டார்.

நேற்று என்னை எதிர்த்து திமி­ரா­கப் பேசி­யது நன்­றாக இருந்­தது. ஆனால் அந்த தெனா­வட்டு போதாது.மேலும் வீரி­ய­மாக இருக்க வேண்­டும் என்று கூறி ஊக்­கப்­ப­டுத்­தி­னார். அதன்­படி நடித்­தேன். இப்­போது எல்­லா­ரும் பாராட்­டு­கி­றார்­கள்'' என்­கி­றார் அர்­ஜெய். இப்­போது இவர் 'தேவி 2,' விஷா­லு­டன் 'அயோக்யா' வர­லட்­சு­மி­யு­டன் 'வெல்­வெட் நக­ரம்' உள்­ளிட்ட ஐந்து புதிய பட­வாய்ப்­பு­களை பெற்­றி­ருக்­கி­றார்.