கிரிக்கெட் வீராங்கனை!

03 நவம்பர் 2018, 07:29 PM

நடி­கர் சிவ­கார்த்­தி­கே­யன் தயா­ரிப்­பா­ள­ராக அறி­மு­க­மா­கும் படம் `கனா'. ''நெருப்­புடா...'' பாடல் பாடிய அருண்­ராஜா காம­ராஜ் இந்த படத்­தின் மூலம் இயக்­கு­ன­ராக அறி­மு­க­மா­கி­றார்.

பெண்­கள் கிரிக்­கெட்டை மையப்­ப­டுத்தி உரு­வாகி இருக்­கும் இந்த படத்­தில் ஐஸ்­வர்யா ராஜேஷ் கிரிக்­கெட் வீராங்­க­னையாக நடித்­தி­ருக்­கி­றார். அவ­ரது அப்­பா­வாக சத்­ய­ராஜ் நடித்­தி­ருக்­கி­றார். இள­வ­ரசு, ரமா, அந்­தோனி பாக்­ய­ராஜ், சவ­ரி­முத்து, ஹலோ  கந்­த­சாமி, முனீஷ்­காந்த், நமோ நாரா­ய­ணன், பாலாஜி வேணு­கோ­பால், பிளேடு சங்­கர், அசோக்குமார், குணா, சத்யா. என்.ஜே உட்­பட பல­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடித்­தி­ருக்­கின்­ற­னர்.

படப்­பி­டிப்பு முடிந்து பின்­னணி வேலை­கள் மும்­மு­ர­மாக நடந்து வரும் நிலை­யில், படத்தை வரு­கிற டிசம்­ப­ரில் ரிலீஸ் செய்ய திட்­ட­மிட்­டுள்­ள­தாக படக்­குழு அறி­வித்­துள்­ளது.

ஏற்­க­னவே வெளி­யான படத்­தின் இசை மற்­றும் டீச­ருக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­தி­ருக்­கி­ன்றன. திபு நிணன் தாமஸ் இசை­ய­மைத்­தி­ருக்­கும் இந்த படத்­திற்கு தினேஷ் கிருஷ்­ணன் ஒளிப்­ப­திவு செய்­தி­ருக்­கி­றார். நடுத்­தர வீட்­டுப்­பெண் ஒரு­வர், தேசிய கிரிக்­கெட் அணி­யில் இடம்­பி­டிப்­பதை மையப்­ப­டுத்தி படம் உரு­வாகி இருக்­கி­றது. தமி­ழில் பெண்­கள் கிரிக்­கெட்டை மையப்­ப­டுத்தி உரு­வா­கும் முதல் படம் என்­கி­றார்­கள் படக்­கு­ழு­வி­னர்.