டாப்சி பதி­லடி!

10 ஆகஸ்ட் 2018, 03:37 PM

வெற்­றி­மா­றன் இயக்­கத்­தில் தனுஷ் நடித்த 'ஆடு­க­ளம்' படம் மூலம் தமி­ழில் அறி­மு­க­மா­ன­வர் நடிகை டாப்சி. அதன் பின்­னர் 'ஆரம்­பம்,' 'காஞ்­சனா 2' போன்ற படங்­க­ளில் நடித்­தா­லும் தமி­ழில் பெரி­தாக ஜொலிக்­க­வில்லை.

தமிழ் படங்­க­ளைக் குறைத்­துக் கொண்டு இந்­தி­யில் கவ­னம் செலுத்தி வந்த அவ­ருக்கு அங்கு நல்ல வர­வேற்பு கிடைத்­தி­ருக்­கி­றது. இத­னால் தற்­போது இந்­தி­யில் பிசி நடி­கை­யாக வலம் வரு­கி­றார் டாப்சி.

அவ­ரது சமூக வலை­தள பக்­கத்­தில் ஒரு­வர், “பாலி­வுட்­டில் மோச­மான தோற்­றம் கொண்ட நடிகை, டாப்­சி­தான். அவ­ரின் அடுத்த படங்­க­ளைப் பார்க்க மாட்­டேன் என நினைக்­கி­றேன். இன்­னும் 2, 3 படங்­க­ளில் அவர் பாலி­வுட்­டில் இருந்து காணா­மல் போய்­வி­டு­வார்” என்­றார்.

அதை­யொட்டி பதி­விட்ட டாப்சி, “ஏற்­க­னவே நான் 'முல்க்,' 'மன்­மர்­ஸி­யான்,' 'பத்லா' ஆகிய படங்­க­ளில் நடித்து வரு­கி­றேன். மேலும், சில படங்­க­ளி­லும் ஒப்­பந்­தம் ஆகி­யுள்­ளேன். எனவே இன்­னும் சில காலம் என்னை சகித்­துக் கொண்­டு­தான் படம் பார்த்­தாக வேண்­டும்” எனத் தன்னை கிண்­டல் செய்த நப­ருக்கு பதில் அளித்­துள்­ளார்.