மீண்­டும் 'தர்­ம­துரை' கூட்­டணி!

10 ஆகஸ்ட் 2018, 03:37 PM

சீனு ராம­சாமி இயக்­கத்­தில் ‘தென்­மேற்கு பரு­வக்­காற்று’ படத்­தில் முதன்­மு­த­லாக நடித்­தார் விஜய் சேது­பதி. இந்த படத்தை தொடர்ந்து இரு­வ­ரும் இணைந்து உரு­வாக்­கிய ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்­ப­டம் இன்­னும் வெளி­யா­க­வில்லை. இந்த படத்தை தொடர்ந்து இயக்­கு­னர் சீனு ராம­சா­மி­யும், விஜய் சேது­ப­தி­யும் இணைந்த படம் 'தர்­ம­துரை.' யுவன் சங்­கர் ராஜா இசை­ய­மைத்த இந்த திரைப்­ப­டம் சூப்­பர் ஹிட்­டா­ன­தோடு தேசிய விரு­தும் பெற்­றது. இந்த படத்தை தொடர்ந்து இயக்­கு­னர் சீனு ராம­சாமி, விஜய் சேது­பதி, யுவன் சங்­கர் ராஜா மூவ­ரும் மீண்­டும் ஒரு படத்­தில் இணை­கி­றார்­கள். இந்த படத்தை யுவன் சங்­கர் ராஜாவே தயா­ரிக்­கி­றார்!

உத­ய­நிதி  நடிப்­பில் ‘கண்ணே கலை­மானே’ படத்தை இயக்­கி­யுள்ள சீனு ராம­சாமி இதற்கு முன்­ன­தாக ‘மாம­னி­தன்’ என்ற பெய­ரில் ஒரு படத்தை இயக்­கு­வ­தாக இருந்­தார். அதில் விஜய் சேது­பதி நடிக்க இருக்­கி­றார் என்­றும் பேசப்­பட்­டது. ஆனால், அதற்கு பிறகு ‘மாம­னி­தன்’ படம் குறித்து எந்த தக­வ­லும் வெளி­யா­க­வில்லை. இந்­நி­லை­யில் இப்­போது சீனு ராம­சாமி வெளி­யிட்­டுள்ள பட அறி­விப்பு, அடுத்து அவர் இயக்­கப் போவது ‘மாம­னி­தன்’ கதை­யையா இல்லை வேறு கதை­யையா என்­பது குறித்து எந்த தக­வ­லை­யும் வெளி­யி­ட­வில்லை. இது குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு விரை­வில் வெளி­யா­கும் என்று எதிர்­பார்க்­க­லாம்.