காயத்ரிக்கு பிறகு மடோனா!

17 ஜூலை 2018, 03:11 PM

விஜய் சேது­ப­தி­யும், அருண்­பாண்­டி­ய­னும் இணைந்து தயா­ரித்­துள்ள படம் 'ஜுங்கா.' கோகுல் இயக்­கி­யுள்ள இந்த படத்­தில் விஜய் சேது­ப­தி­யு­டன் சாயிஷா, மடோனா செபாஸ்­டி­யன், சரண்யா பொன்­வண்­ணன், 'யோகி' பாபு, சுரேஷ் மேனன் உட்­பட பலர் நடித்­துள்­ள­னர். வரு­கிற 27-ம் தேதி ‘ஜுங்கா’ ரிலீ­ஸா­கி­றது. படம் பற்றி விஜய் சேது­பதி கூறு­கை­யில்...

''இயக்­கு­னர் கோகுல் மீது எனக்கு எப்­போ­தும் பெரிய நம்­பிக்கை உண்டு. அவ­ரு­டைய எண்ண அலை­கள் எப்­போ­தும் என்னை வசீ­க­ரிக்­கும். அதனை என்­னால் எளி­தில் உட்­கொள்ள முடி­யும். இது­தான் ‘ஜுங்­கா’­வில் நான் நடிக்க ஒப்­புக்­கொண்­ட­தற்கு முதல் கார­ணம். ‘தென்­மேற்கு பரு­வக்­காற்று’ படத்­திற்கு பிறகு இந்த படத்­தில் சரண்யா மேடத்­து­டன் நடித்­தது மறக்க முடி­யாத அனு­ப­வம். ஒரு கேரக்­டரை எப்­படி மேம்­ப­டுத்தி நடிக்க வேண்­டும் என்­பதை அவ­ரி­ட­மி­ருந்து கற்­றுக் கொண்­டேன்.

இந்த படத்­தில் சாயிஷா, மடோனா செபாஸ்­டி­யன் என இரண்டு கதா­நா­ய­கி­கள் நடித்­தி­ருக்­கி­றார்­கள். இவர்­க­ளில் மடோ­னா­வுக்கு காட்­சி­கள் அதி­கம் இல்லை என்­றா­லும் அவ­ருக்கு வழங்­கிய கேரக்­டரை சிறப்­பாக செய்­துள்­ளார். நான் சந்­தித்த நடி­கை­க­ளில் மிகச்­சி­றந்த நடிகை மடோனா! இதற்கு முன் நான் நடிகை காயத்­ரியை அப்­படி பல­முறை சொல்­லி­யி­ருக்­கி­றேன். காயத்­ரிக்கு அடுத்து இப்­போது மடோ­னாவை திற­மை­யான நடிகை என்று சொல்­கி­றேன்!

‘ஆண்­ட­வன் கட்­ட­ளை’க்கு பிறகு 'யோகி' பாபு­வு­டன் இணைந்து நடிக்­கும் படம் ‘ஜுங்கா’. படப்­பி­டிப்பு தளத்­தில் அந்த நேரத்­துக்கு என்ன பஞ்ச் பேச­மு­டி­யுமோ அதை பேசி அசத்­து­வார் ‘யோகி’ பாபு. இதில் நாங்­கள் ரசித்து ரசித்து செய்­தி­ருக்­கி­றோம். 'ஜுங்கா' உங்­கள் எல்­லோ­ரை­யும் ரசிக்க வைக்க 27-ம் தேதி வெளி­யா­கி­றது! பார்த்­து­விட்டு சொல்­லுங்­கள்'' என்­றார்.