அவருடைய தைரியம் ரொம்பவே பிடிக்கும்! -–- மஞ்­சிமா மோகன்

11 ஜூலை 2018, 03:24 PM

மஞ்­சிமா மோகன்!  ‘குயின்’ இந்­திப் படத்­தின் மலை­யாள ரீமேக்­கான ‘ஜம் ஜம்’ படத்­தில் நடித்து வரு­ப­வ­ரி­டம் பேசி­ய­தி­லி­ருந்து...

* 'ஜம் ஜம்' பற்றி?

 இறு­திக் கட்­டத்­துக்கு வந்­து­விட்­டது. இன்­னும் ஒரு வாரம் மட்­டுமே படப்­பி­டிப்பு. இந்­தி­யில் ‘குயின்’ படம் ரிலீ­ஸா­ன­போதே பார்த்­து­விட்­டேன். ரொம்ப பிடித்­தி­ருந்­தது. அதன் மலை­யாள ரீமேக்­கில் நடிப்­பேன் என்று நினைத்­துக்­கூ­டப் பார்க்­க­வில்லை. கங்­கனா ரனா­வத் நடித்த கேரக்­டர் எனக்கு எந்த அள­வுக்­குப் பொருத்­த­மாக இருக்­கி­றது என்­ப­தைப் படம் பார்த்து ரசி­கர்­கள்­தான் சொல்ல வேண்­டும். அதற்­காக  ஐயாம் வெயிட்­டிங்! தமிழ் உள்­ளிட்ட மற்ற மொழி­க­ளில் நடிக்­கும் நடி­கை­க­ளும் என்­னைப் போல் காத்­தி­ருப்­பார்­கள் என்று நினைக்­கி­றேன்.

* கதை­யில் ஏதா­வது திருத்­தம் செய்­துள்­ளார்­களா?

ஆமாம், கங்­க­னா­வின் கேரக்­டர் முஸ்­லிம் என்­ப­தால் சில கட்­டுப்­பா­டு­கள் இருக்­கின்­றன. அத­னால், பிரச்னை எது­வும் ஏற்­ப­டக்­கூ­டாது என்­ப­தற்­காக ஆங்­காங்கே சின்­னச் சின்ன மாற்­றங்­க­ளைச் செய்­தி­ருக்­கி­றார் இயக்­கு­நர்.

* வாழ்க்கை வர­லாற்­றுப் படங்­க­ளில் நடிப்­பீர்­களா?

நிச்­ச­ய­மாக நடிப்­பேன். தமிழ்­நாட்­டின் முன்­னாள் முதல்­வர் மறைந்த ஜெய­ல­லி­தா­வின் வாழ்க்கை வர­லாற்­றில் நடிக்க வேண்­டும் என்ற ஆசை இருக்­கி­றது. அவ­ரின் தைரி­யம் எனக்கு ரொம்­பவே பிடிக்­கும். ஒரு விஷ­யத்­தைச் செய்ய வேண்­டும் என்று அவர் முடி­வெ­டுத்­து­விட்­டால், எதற்­கா­க­வும் அதை விட்­டுக் கொடுக்க மாட்­டார். இந்த தைரி­யம் எல்லா பெண்­க­ளுக்­கும் இருக்க வேண்­டும் என நினைக்­கி­றேன். பயோ­பிக் படங்­க­ளைப் பொறுத்­த­வரை அந்த வாய்ப்­புக்­கா­கக் காத்­தி­ருக்­கி­றேன்.

* தமி­ழில் நடிக்­கும் படம்?

'தேவ­ராட்­டம்' என்ற படத்­தில் நடிக்­கி­றேன்.இதில் கவு­தம் கார்த்­திக் ஜோடி­யாக நடிக்­கி­றேன். இது­வரை அவரை சந்­தித்­தது கிடை­யாது. ஷூட்­டிங் ஸ்பாட்­டுக்­குச் சென்ற பிற­கு­தான் அவ­ரைப் பற்­றித் தெரி­ய­வ­ரும். அத­னால் அவ­ரைப் பற்­றிய எந்த முன் அபிப்­ரா­ய­மும் வைத்­துக் கொள்­ள­வில்லை. பொது­வாக, நான் யாரைப் பற்­றி­யும் அப்­படி வைத்­துக் கொள்­வது கிடை­யாது. கார­ணம், நாம் ஒரு­வ­ரைப் பற்­றிக் கேள்­விப்­ப­டு­வது ஒன்­றாக இருக்­கும். பழ­கிப் பார்த்த பிறகு முற்­றி­லும் வேறொன்­றாக இருக்­கும்.

* குறை­வான படங்­க­ளில் நடிப்­பது ஏன்?

உண்­மை­யைச் சொல்­லப்­போ­னால், நான் இதற்கு முன் ஒப்­புக்­கொண்ட நான்­கைந்து படங்­கள் நிறுத்­தப்­பட்­டு­விட்­டன. அது­வும் தொடர்ச்­சி­யாக அப்­படி நடந்­த­தால் இடை­வெளி அதி­க­மா­கி­விட்­டது. அந்­தப் படங்­க­ளில் நடித்­தி­ருந்­தால், இப்­போது அவை வரி­சை­யாக வெளி­வந்­தி­ருக்­கும். எனக்­கும் இடை­வெளி விழுந்­தி­ருக்­காது. இயக்­கு­நர் கதையை என்­னி­டம் விவ­ரிக்­கும்­போது என்­னு­டைய கேரக்­டரோ, கதை­யில் ஒரு சூழ்­நி­லையோ பிடித்­தி­ருந்­தால் போதும். உடனே ஓகே சொல்­லி­வி­டு­வேன்.