பேய் மீது நம்பிக்கை இல்லை!

11 ஜூலை 2018, 03:22 PM

சாய்ராஜ் பிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பாக பி.பீ.எஸ். ஈசா குகா தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'ஜெஸி'. கின்னஸ் சாதனை படமான ‘அகடம்’ மற்றும் ‘நாகேஷ் திரையரங்கம்’ திரைரப்படங்களை இயக்கிய இயக்குநர் இசாக்கின் அடுத்த  படைப்பு.

இது ஹாலிவுட் பாணியில் தயாராகியிருக்கும் திகில் திரைப்படம். இதில் நகைச்சுவை கலக்கவில்லை. பேய்கள் மீது நம்பிக்கையில்லாத ஒரு திரைப்பட  இயக்குனர், பேய் படம் எடுக்க திட்டமிடுகிறார். இதற்காக ஒரு தனிமையான பங்களாவில் குடியேறுகிறார் .அந்த பங்களாவில் ஏதோ ஒரு அமானுஷ்யம் உள்ளதால் டைரக்டர் பேனாவை திறந்து எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம் அவரை எழுத விடாமல் தடுக்கிறது .அவர் கதையை எழுதினாரா, இல்லையா, என்பது மீதி கதை இதுதான் இந்த 'ஜெஸி' படத்தின் கதை என்கிறார் இயக்குனர் இசாக். இதில் புதுமுக ஹீரோ ஜெமினி நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரிங்கா நடிக்கிறார்.