மணிரத்னம் படத்தில் மாடல் அழகி!

12 ஜூன் 2018, 06:35 PM

இந்­தி­யா­வின் பிர­பல மாடல் அழகி டயானா எரப்பா. மிஸ்.பெமினா, மிஸ்.இண்­டியா போட்­டி­க­ளில் கவ­னம் ஈர்த்த டயானா, கடந்த ஆண்டு கிங் பிஷர் காலண்­ட­ரில் பிகினி உடை­யில் கொடுத்த போஸ் மூலம் புகழ்­பெற்­றார். கர்­னா­டக மாநி­லம் கூர்க்கை சேர்ந்த டயானா, தற்­போது முன்­னணி மாடல் அழ­கி­யாக உள்­ளார். அவ­ருக்­கென்று தனி ரசி­கர் வட்­டம் இருக்­கி­றது.

தற்­போது இவர்,  மணி­ரத்­னம் இயக்­கும் 'செக்­கச் சிவந்த வானம்' படத்­தின் மூலம் சினிமா நட்­சத்­தி­ர­மா­கி­யி­ருக்­கி­றார். இதில், அவர் சிம்பு ஜோடி­யாக நடித்­துள்­ளார். கிளா­ம­ருக்கு புகழ்­பெற்ற டயானா, படத்­தி­லும் மாடல் அழ­கி­யாக நடித்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

கன்­னட சினிமா வாய்ப்­பு­களை மறுத்த டயானா, மணி­ரத்­னம் படம் என்­ப­தால் நடிக்க ஒப்­புக் கொண்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. தமி­ழில் தற்­போது கிளா­மர் நடி­கை­கள் இல்­லாத குறையை டயானா தீர்ப்­பாரா என்­பது படம் வெளி­வந்த பிற­கு­தான் தெரி­யும்.