செட்­டில் ஆக­ணும்னு ஆசை வந்­தி­டுச்சு! –- ஷில்பா மஞ்­சுநாத்

12 ஜூன் 2018, 06:34 PM

‘காளி’­­யில் விஜய் ஆண்­ட­னி­யின் காத­லி­யாக நடித்த ஷில்பா மஞ்­சு­நாத்­து­தான் இப்­போது டாக் ஆப் த கோலி­வுட்.  அழ­காக தமி­ழில் பேசு­கி­றார். பேசட்­டும்...

* நடிப்பு எப்­படி?

 என்னை டாக்­ட­ரா­கவோ, இன்­ஜி­னி­ய­ரா­கவோ ஆக்­கு­வ­து­தான் அப்­பா­வின் கனவு. எனக்கோ படிப்­பை­விட விளை­யாட்­டில்­தான் ஆர்­வம். தேசிய அள­வில் வாலி­பால் விளை­யா­டி­யி­ருக்­கேன். சும்மா டைம்­பா­ஸுக்­காக மாட­லிங் செய்­தேன். அது­தான் என்னை இப்போ சினி­மாத்­து­றைக்கு கொண்டு வந்­தி­ருக்கு. எதை செய்­தா­லும் அதை தீவி­ர­மாக செய்­ய­வேண்­டும் என்­பது என் பண்பு. தியேட்­டர் பெர்­பார்­மன்ஸ், ரோட் ஷோ என்று செய்து என்­னு­டைய நடிப்­புத் திற­மையை கூர்­தீட்­டிக் கொண்­டி­ருக்­கி­றேன்.

* பெண் இயக்­கு­நர் கிருத்­திகா டைரக்­க்ஷ­னில் நடித்த அனு­ப­வம்?

நடிப்பே தெரி­யா­த­வர்­க­ளி­டம் கூட நல்ல நடிப்பை வாங்­கக்­கூ­டிய திற­மை­சாலி. காம்ப்­ர­மைஸ் என்­கிற பேச்­சுக்கே அவங்­க­கிட்ட இட­மில்லை. ரொம்ப பிரண்ட்­லி­யா­ன­வங்க. ஆனா­லும், அவங்க எதிர்­பார்க்­கி­றதை வாங்­குற வைக்­கும் விடவே மாட்­டாங்க. பெரிய பேமி­லியை சேர்ந்­த­வங்க. ஆனா, அதோட அடை­யா­ளம் அவங்க நடை, உடை, பாவ­னை­க­ளில் கொஞ்­சம்­கூட தெரி­யாது. கடு­மை­யான உழைப்­பாளி.

* விஜய் ஆண்­டனி?

ரொம்­ப­வுமே இயல்­பான மனி­தர். மத்­த­வங்க விஷ­யத்­தில் மூக்கை நுழைக்­க­மாட்­டார். அவ­ருண்டு, அவர் வேலை­யுண்­டுன்னு இருப்­பார். ஜூனி­யர், சீனி­யர் பாகு­பாடு காட்­டா­மல் எல்­லோ­ரி­ட­மும் ஒரே மரி­யா­தையை வெளிப்­ப­டுத்­து­வார். அவர் ஒரு மல்டி டாஸ்க் பர்­ச­னா­லிட்டி. ‘காளி’­­யில் நடிச்­சுக்­கிட்டே ‘அண்­ணா­து­ரை’க்­காக எடிட்­டிங், மியூ­சிக்­குன்னு இயங்­கிக்­கிட்­டி­ருந்­தார்.

* இப்போ நடிச்­சுக்­கிட்­டி­ருக்­கிற 'பேர­ழகி' பத்தி?

எனக்கு நானே பாட்­டியா நடிக்­கி­றேன். எப்­ப­டின்னு படம் வந்­த­துக்­கப்­பு­றம் பாருங்க. படம் பற்றி இப்­போதே நிறைய பேசினா, ரிலீ­ஸின்­போது பெப் இருக்­காது. இது தவிர கன்­ன­டத்­தி­லும் என் நடிப்­பில் இரண்டு படங்­கள் ரிலீ­ஸுக்கு ரெடியா இருக்கு.

* சென்னை செட் ஆயி­டுச்சா?

 சென்­னையை பத்தி நான் நெகட்­டிவ்­வா­கத்­தான் நிறைய கேள்­விப்­பட்­டேன். ஆனா, இங்கே வந்­த­துக்­கப்­பு­றம்­தான் சென்னை மக்­கள் எவ்­வ­ளவு சிநே­க­மா­ன­வர்­கள் என்­பதை தெரிஞ்­சுக்­கிட்­டேன். முரட்­டுத்­த­ன­மான அன்பு. பசிக்­க­லேன்னு சொன்­னா­கூட வலுக்­கட்­டா­யமா சாப்­பிட வைக்­கி­றாங்க. அவங்க மொழி மேல ரொம்ப பற்று கொண்­ட­வங்க. ‘சென்­னைக்கு வந்­துட்­டீங்க இல்லே? தமி­ழில் பேசுங்­க’ன்னு சொல்லி, பார்க்­கி­ற­வங்­கல்­லாம் தமிழ் கத்­துக் கொடுக்­கி­றாங்க.

பிர­தி­ப­லனே பார்க்­கா­மல் உத­வு­றாங்க. சென்னை மக்­க­ளோட அன்­பான உப­ச­ரிப்­பைப் பார்த்­துட்டு, சீக்­கி­ரத்­திலே சென்­னை­யிலே செட்­டில் ஆக­ணும்னு ஆசை வந்­து­டுச்சு.