ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 13–06–18

12 ஜூன் 2018, 06:06 PM

கவி­ஞர் பொன்­ன­டி­யான் – இளை­ய­ராஜா கூட்­டணி!

(சென்ற வாரத் தொடர்ச்சி)

2) ''இன்று வந்த இன்­பம் என்­னவோ அதைக் கண்டு கண்டு அன்பு பொங்­கவோ, குயில் பாட்டு ஹோ வந்­த­தென்ன இள­மானே" சுந்­த­ரக்­கு­ரல் சொர்­ண­லதா பாடிய இந்­தப் பாடலை எத்­தனை தடவை அலுக்­கா­மல் கேட்­டி­ருப்­போம். அது­வும் "என் ராசா­வின் மன­சிலே" படம் வந்த காலத்­தில்  இந்த பாட­லின் மீதான காதல் குறை­ய­வில்லை.

இசை­ஞானி இளை­ய­ரா­ஜா­வின் ஆரம்­ப­கா­லக் கவி­ஞர் பஞ்சு அரு­ணா­ச­லத்­தில் இருந்து பின்­னா­ளில் கங்கை அம­ரன், வாலி, வைர­முத்து போன்ற பர­வ­லாக அறி­யப்­பட்ட பாட­லா­சி­ரி­யர்­கள் வரை ஒரு குழாம் இருக்க, இன்­னொரு வரி­சை­யில் புல­மைப்­பித்­தன், பிறை­சூ­டன், மு. மேத்தா, முத்­து­லிங்­கம் என்ற வகை­யில் கவி­ஞர் பொன்­ன­டி­யா­னும் இருந்­தி­ருக்­கின்­றார். ஆனால் திரை­யிசை பாடல்­க­ளின் நீண்­ட­கா­லத் துர­திர்ஷ்­ட­மாக, பாட­லா­சி­ரி­யர்­கள் குறித்த அறி­மு­க­மில்­லா­மல் பாடல்­க­ளைக் கேட்டு ரசிக்­கப் பழ­கி­விட்­டோம். வானொ­லி­க­ளும் நைச்­சி­ய­மாக அவற்­றைத் தவிர்த்து விட்­டன. இசை­ஞானி இளை­ய­ரா­ஜா­வின் ஆரம்­ப­கா­லம் தொட்டு இன்று வரை முப்­ப­துக்­கும் மேற்­பட்ட பாட­லா­சி­ரி­யர்­க­ளைப் பட்­டி­ய­லி­ட­லாம். ஆனால் நமக்கு அதி­கம் அறி­மு­க­மான பாடல்­க­ளில் வைர­முத்து, வாலி போன்­ற­வர்­களே ஓர­ளவு இனங்­கா­ணப்­பட்ட பாட­லா­சி­ரி­யர்­க­ளாக அந்­தந்­தப் பாடல்­க­ளுக்கு உரித்­து­டை­ய­வர்­களா கின்­றார்­கள்.

எண்­ப­து­க­ளிலே இவ்­வாறு இளை­ய­ரா­ஜா­வின் கடைக்­கண் பார்­வை­யில் அரு­மை­யான பாடல்­கள் பல­வற்­றைக் கொடுத்த கவி­ஞர் பொன்­ன­டி­யா­னைச் சிறப்­பிக்­கும் வகை­யில் இந்­தப் பதி­வைக் கொடுக்­க­லாம் என்­றி­ருக்­கி­றேன். கவி­ஞர் பொன்­ன­டி­யான், மெல்­லிசை மன்­னர் எம்.எஸ். விஸ்­வ­நா­தன், ஜி.கே. வெங்­க­டேஷ், சந்­தி­ர­போஸ் உள்­ளிட்ட இசை­ய­மைப்­பா­ளர்­க­ளுக்­கும் பாடல்­களை எழு­தி­யி­ருந்­தா­லும், இளை­ய­ராஜா உச்­சத்­தில் இருந்த போது ஜோடி கட்­டிய பாடல்­கள் அள­வுக்கு மற்­றைய இசை­ய­மைப்­பா­ளர்­க­ளின் இசை­யில் வந்த இவ­ரது பாடல்­கள் அதி­கம் அறி­யப்­ப­ட­வில்லை.

கவி­ஞர் பொன்­ன­டி­யான் – இசை­ஞானி இளை­ய­ராஜா கூட்­ட­ணி­யில் வந்த ஒரு சில நன்­முத்­துக்­களை இங்கே பகிர்­கின்­றேன்.

'சொல்­லத்­து­டிக்­குது மனசு,' எடிட்­டர் லெனின் இயக்­கத்­தில் வந்த படம்.  'சொல்­லத்­து­டிக்­குது மனசு' படத்­தில் வந்த பாடல்­கள் அத்­த­னை­யும் முத்­துக்­கள். இந்த படத்­தில் வந்த "குயி­லுக்­கொரு நிறம் இருக்கு" என்று மலே­சியா வாசு­தே­வன் பாட­லைப் பாடு­கின்­றார்.

கவி­ஞர் பொன்­ன­டி­யா­னுக்கு ஒரு படத்­தின் முழுப்­பா­டல்க ­ளையும் எழுத வைத்­துக் கவு­ர­வம் கொடுத்த படம் "ஒரு­வர் வாழும் ஆல­யம்". இந்த படத்­தின் கதைக்­க­ள­னும் இசை சார்ந்­தது. "உயிரே உயிரே", "மலை­யோ­ரம் மயிலே", "சிங்­கா­ரப் பெண் ஒருத்தி" போன்ற இந்­தப் படத்­தின் பாடல்­கள் வரி­சை­யிலே கே.ஜே. ஜேசு­தாஸ் பாடும் "நீ பவுர்­ணமி என்­றும் என் நெஞ்­சிலே" பாட­லும் சிறப்­பா­னது.  

 இளை­ய­ரா­ஜா­வின் குடும்ப நிறு­வ­னம் "பாவ­லர் கிரி­யே­ஷன்ஸ்" தயா­ரிப்­பில் வந்த படம் "ராஜாதி ராஜா".  கங்கை அம­ரன் தவிர, பிறை­சூ­ட­னும், பொன்­ன­டி­யா­னும் பாடல்­க­ளிலே தம் பங்­க­ளிப்பை வெளிப்­ப­டுத்­தி­னர், குறிப்­பாக "என்­கிட்ட மோதாதே" பாடல் அன்­றைய எதி­ராளி இதற்கு குட்டு வைக்­க­வும் பயன்­பட்­டி­ருக்­க­லாம் என்று நண்­பர்­க­ளி­டையே அப்­போது பேசிக்­கொண்­டோம்.

தொண்­ணூ­று­க­ளிலே முக்­கி­ய­மான தயா­ரிப்­பா­ள­ராக விளங்­கிய ஏ.ஜி. சுப்­ர­ம­ணி­யம் தயா­ரிப்­பில் வந்த படம் "தங்­கக்­கிளி". வழக்­கம்­போல அவ­ரது தோல்­விப்­ப­டங்­க­ளில் இது­வும் ஒன்று. கார­ணம் என்­றால் இயக்­கு­ன­ராக ஆசைப்­பட்ட ராஜ­வர்­ம­னின் மாமூல் கதை. நடி­கர் முரளி, இசை­ஞானி இளை­ய­ராஜா ஆகி­யோர் சேர்ந்த கூட்­டணி என்­ற­ள­வில் மட்­டுமே இன்­று­வரை நினைப்­பி­ருக்­கும். இந்­தப் படத்­திலே வரும் "நினைக்­காத நேர­மில்லை" பாடல் இலங்கை வானொ­லி­க­ளில் இன்­ற­ள­வும் நேசிக்­கப்­ப­டும் பாட்டு. பொன்­ன­டி­யான் வரி­க­ளுக்கு மனோ, எஸ்.ஜானகி பாடி­யி­ருக்­கி­றார்­கள்.

ராம­ரா­ஜ­னின் இறங்­கு­மு­கம் ஆரம்­பிக்­கும் வேளை வந்த படங்­க­ளில் ஒன்று "பாட்­டுக்கு நான் அடிமை." இந்த படத்­தில் வரும் "தாலாட்டு கேட்­காத பேர் இங்கு யாரு" ரயில் சத்­தம் சந்­தம் போட பொன்­ன­டி­யான் வரி­கள் இசை­ஞா­னி­யின் இசை­யில் மயி­லி­ற­காய் வரு­டி­யது.

எஸ்.பி. பால­சுப்­ர­ம­ணி­யம், விஜய்­காந்த் அண்­ணன் தம்­பி­யாக நடித்த 'பர­தன்' படத்­தில் வரும் "அழகே அமுதே" பாடல் பொன்­ன­டி­யா­னுக்­குக் கிடைத்த இன்­னொரு முத்து.  

"என் ராசா­வின் மன­சிலே" தொண்­ணூ­று­க­ளில் கொடுத்த பிரம்­மாண்­ட­மான வெற்றி இன்­ற­ள­வும் மறக்க முடி­யாது. வெற்­றி­யில் சம அளவு பங்கு போட்­டன இசை­ஞானி இளை­ய­ரா­ஜா­வின் இனிய பாடல்­கள். முரட்டு சுபா­வம் உள்ள தன் கண­வனை வெறுத்து ஒதுக்­கும் அவள், தன் கண­வ­னின் நேசம் உணர்ந்து பாடும் பாட்டு. தம் திரு­மண பந்­தத்­தின் அறு­வ­டை­யாய் தம் வயிற்­றில் சுமக்­கும் குழந்­தை­யோடு பாடும் இந்­தப் பாடலை பொன்­ன­டி­யான் களம் உணர்ந்து பொருள் கொடுத்து எழு­தி­யி­ருக்­கி­றார்.

பாட­லின் வரி­க­ளோடு சீரா­கப் பய­ணிக்­கும் இசை, சொர்­ண­ல­தா­வின் குரல் என்று எல்­லாமே சரி­ச­ம­மாக அமைந்த பெருஞ்­சுவை. இதே பாடல் இந்த படத்­தில் மூன்று பாடல்­கள் (சோகம் உட்­பட) பொன்­ன­டி­யான் அவர்­க­ளால் எழு­தப்­பட்­டி­ருக்­கின்­றன. அடுத்த தடவை "குயில்­பாட்டு ஓ வந்­த­தென்ன இள­மானே" பாட­லைக் கேட்­கும் போது கண்­டிப்­பாக கவி­ஞர் பொன்­ன­டி­யா­னும் உங்­கள் நினை­வில் வரு­வார்.